
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 1 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. புரட்சிக்கவி என்று போற்றப்படுபவார் யார்?
அ) பாரதியார் ஆ)பாரதிதாசன் இ)கவிமணி தேசியவிநாயனகார் ஈ)பெருஞசித்திரனார்
விடை: ஆ)பாரதிதாசன்
2. எட்டு + திசை சேர்த்து எழுதுக
அ)எட்டுத்திசை ஆ)எட்டிசை இ)எண்டிசை ஈ)எண்றிசை
விடை: அ)எட்டுத்திசை
3. 5 என்பதன் தமிழெண் யாது?
அ) க ஆ)உ இ)ங ஈ)ரூ
விடை: ஈ)ரூ
4. “கடல்நீர் சூழ்ந்த கமஞ்சூழ் எழிலி” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
அ)பரிபாடல் ஆ)கலித்தொகை இ)மலைபடுகடாம் ஈ)கார்நாற்பது
விடை: ஈ)கார்நாற்பது
5. திகிரி- பொருள் தருக
அ)பொன் ஆ)ஆணைச்சக்கரம் இ)வைரம் ஈ)தங்கம்
விடை: ஆ)ஆணைச்சக்கரம்
6. உலக சிட்டுக்குருவிகள் நாள் எது?
அ) ஜனவரி 15 ஆ)பிப்ரவரி 10 இ) மார்ச்20 ஈ) ஏப்ரல் 30
விடை: இ) மார்ச்20
7. “கிழவனும் கடலும்” புதினத்தின் ஆசிரியர் யார்?
அ)ஜூல்ஸ் வெர்ன் ஆ)லியோ டால்ஸ்டாய் இ)எர்னஸ்ட ஹெமிங்வே ஈ)பெர்னாட்ஷா
விடை: இ)எர்னஸ்ட ஹெமிங்வே
8. மூதுரையில் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
அ)50 ஆ)31 இ)55 ஈ)65
விடை: ஆ)31
9. மக்கள் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)கவிஞர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)கவிஞர் வாலி ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விடை: ஈ)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10. கருப்பு காந்தி என்றழைக்கப் படுபவர் யார்?
அ)காமரசர் ஆ)பெரியார் இ)ராஜாஜி ஈ) சதயமூர்த்தி
விடை: அ)காமரசர்
11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 4 ஆம் தளத்தில் உள்ள நூல்கள் எவை?
அ)கணக்கு பொறியியல் ஆ)பொருளியல் சட்டம் வணிகம் இ)கணிpணி ஆங்கிலம் ஈ)தாவரவியல் விலங்கியல்
விடை: ஆ)பொருளியல் சட்டம் வணிகம்
12. ஆசார கோவையின் ஆசிரியர் யார்?
அ)ஔவையார் ஆ)முன்றுறை அரையனார் இ)பெருவாயின் முள்ளியார் ஈ)காரியாசான்
விடை: இ)பெருவாயின் முள்ளியார்
13. ‘பொங்கல் திருவிழா’ பஞ்சாப் மாநிலத்தில் என்ன பெயரில் கொண்டாடப்படுகிறது?
அ)மகரசங்ராந்தி ஆ)உத்தராயன் இ)மகல்வாரி ஈ)லோரி
விடை: ஈ)லோரி
14. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?
விடை: விடையை கீழே comment செய்யவும்
15. முடியரசனின் இயற்பெயர் என்ன?
அ)ழ ஆ)ண இ)ந ஈ)ன
விடை: அ)ழ
16. இராதா கிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ)கி.ராஜநாராயணன் ஆ)தாராபாரதி இ)பாவாணர் ஈ)தமிழகனார்
விடை: ஆ)தாராபாரதி
17. வேலுநாச்சியாரின் காலம் ?
அ)1620-1680 ஆ)1420-1640 இ)1730-1796 ஈ)1800-01870
விடை: இ)1730-1796
18. யுhரின் பாடல்கள் தமிழ்மொழியன் உபநிடதம் என்றழைக்கப்படுகிறது?
அ)திருமூலர் பாடல்கள் ஆ)வள்ளலார் பாடல்கள் இ)ஆண்டாள் பாடல்கள் ஈ)தாயுமானவர் பாடல்கள்
விடை: ஈ)தாயுமானவர் பாடல்கள்
19. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் யார்?
அ)கவிஞர் புவியரசு ஆ) கவிமணி தேசிய விநாயகனார் இ)எழில்முதல்வன் ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்
விடை: அ)கவிஞர் புவியர
20. ‘பாதம்’ சிறுகதையை எழுதியவர் யார்?
அ) கமலாயன் ஆ)எஸ்.ராமகிருஷ்ணன் இ)கந்தர்வன் ஈ)சோ.தர்மன்.
விடை: ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்
21. காந்தியக் கவிஞர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)ஈரோடு தமிழன்பன் ஆ)கவிக்கோ அப்துல் ரகுமான் இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார் ஈ)மு.மேத்தா
விடை: இ)நாமக்கல் கவிஞர் வெ.இராமலிஙகனார்
22. பகுத்தறிவ கவிராயர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)கவிப்பேரரசு வைரமுத்து ஆ)கவியரசு கண்ணதாசன் இ)உடுமலை நாராயணக் கவி ஈ)பாரதிதாசன்
விடை: இ)உடுமலை நாராயணக் கவி
23. மொழியின் முதல் நிலை………………………
அ)எழுவது ஆ) படிப்பது இ) எதுவுமில்லை ஈ)கேட்டல்
விடை: ஈ)கேட்டல்
24. குறில் எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது எந்த சொல்?
அ)கரம் ஆ)காரம் இ) கான் ஈ)எதுவுமில்லை
விடை: அ)கரம்
25. உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)நாமக்கல் கவிஞர் ஆ)சுரதா இ) கவிமணி தேசியவிநாயகனார் ஈ)பெருஞ்சித்திரனார்
விடை: ஆ)சுரதா
26. ‘கொங்குதேர் வாழ்க்கை” என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
அ)புவியரசு ஆ)வானமாமலை இ)ராஜமார்த்தாண்டன் ஈ)உ.வே.சாமிநாதய்யர்
விடை: இ)ராஜமார்த்தாண்டன்
27. ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது எது?
அ)நிறம் ஆ)உயரம் இ)எடை ஈ)தந்தம்
விடை: ஈ)தந்தம்
28. பெரும்பாணாற்று படையின் பாட்டுடைத்தலைவன் யார்?
அ) தொண்டைமான் இளந்திரையன் ஆ)கரிகால் வளவன் இ)நன்னன் ஈ)வேள்பாரி
விடை: அ) தொண்டைமான் இளந்திரையன்
29. நெடுந்தொகை என்றழைக்கப்படும் நூல் எது?
அ)அகநானூறு ஆ)புறநானூறு இ)எட்டுத்தொகை ஈ)பதிற்றுப்பத்து
விடை: அ)அகநானூறு
30. கப்பல் கட்டும் கலைஞர்கள் எந்த பெயரில் அழைக்கப்பட்டார்கள்?
அ)மாலுமி ஆ)கம்மியர் இ)நீகான் ஈ)எதுவுமில்லை
விடை: ஆ)கம்மியர்
31. அறிவியல் புனைகதைகளின் பிதாமகன் யார்?
அ)சுஜாதா ஆ)ராஜேஷ்குமார் இ)ஜூல்ஸ் வெர்ன் ஈ)N’க்ஸ்பியர்
விடை: இ)ஜூல்ஸ் வெர்ன்
32. பாரதிதாசன் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நூல் எது?
அ)பாண்டியன் பரிசு ஆ)அழகின் சிரிப்பு இ)தமிழச்சி ஈ)பிசிராந்தையார்
விடை: ஈ)பிசிராந்தையார்
33. வேளாண்வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?
அ)நாலடியார் ஆ)திருக்குறள் இ)சிலம்பதிகாரம் ஈ)மணிமேகலை
விடை: அ)நாலடியார்
34. ‘நை’ ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
அ)அன்பு ஆ)இழிவு இ)உயர்வு ஈ)தாழ்வு
விடை: ஆ)இழிவு
35. ‘வரதன்’ யாருடைய இயற்பெயர்?
அ)பெருஞ்சித்திரனார் ஆ)தமிழ்ஒளி இ)காளமேகப்புலவர் ஈ)முடியரசன்
விடை: இ)காளமேகப்புலவர்
36. புழமொழி நானூறு’ நூலின் ஆசிரியர் யார்?
அ) பெருங்கௌசிகனார் ஆ)வெண்ணிக்குயத்தியார் இ)ஔவையார் ஈ)முன்றுறை அரையனார்
விடை: ஈ)முன்றுறை அரையனார்
37. திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எந்த தொழில்?
அ)உழவுத்தொழில் ஆ) கைத்தொழில் இ)இணையவழி விற்பனை ஈ)மீன்பிடித்தல்
விடை: அ)உழவுத்தொழில்
38. இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
அ)டி.கே. சிதம்பரனார் ஆ)திரு.வி.க இ)பம்மல் சம் மந்தனார் ஈ)என்.எஸ்.கிருஷ்ணன்
விடை: அ)டி.கே. சிதம்பரனார்
39. பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர் எது?
அ)மாமல்லபுரம் ஆ)திருவெஃக்கா இ)மதுரை ஈ)கன்னியாகுமரி
விடை: ஆ)திருவெஃக்கா
40. பு+தத்தாழ்வார் பிறந்த ஊர் எது?
அ)திருவொற்றியு+ர் ஆ)மாமல்லபுரம் இ)சிவககங்கை ஈ)திருநெல்வேலி
விடை: ஆ)மாமல்லபுரம்
41. பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?
அ)நம்நாடு தாய்மண் ஆ)குடியரசு விடுதலை இ)இந்தியா விஜயா ஈ)ஒரு பைசா தமிழன், ஞானபானு
விடை: இ)இந்தியா விஜயா
42. தொல்காப்பயத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
அ)10 ஆ)20 இ) 30 ஈ)27
விடை: ஈ)27
43. வளைந்த கோடுகளால் ஆன மிகப் பழமையான எழுத்து எது?
அ)சீன எழுத்து ஆ)வடமொழி இ)வட்டெழுத்து ஈ)சிந்துசமவெளி நாகரிக எழுத்து
விடை: இ)வட்டெழுத்து
44. செந்தமிழ் அந்தணர் என்றழைக்கப் படுபவர் யார்?
அ)கபிலர் ஆ)பரணர் இ)இரா.இளங்குமரன் ஈ)பாவாணர்
விடை: இ)இரா.இளங்குமரன்
45. உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம் எது?
அ)மூக்கு ஆ)மார்பு இ)தலை ஈ)கழுத்து
விடை: ஈ)கழுத்து
46. தமிழகத்தின் வோர்ட்ஸ்வோர்த் என்றழைக்கப்படுபவர் யார்?
அ) ராஜமார்த்தாண்டன் ஆ) மீ.ராஜேந்திரன் இ)முடியரசன் ஈ)வாணிதாசன்
விடை: ஈ)வாணிதாசன்
47. சேகரம் என்ற சொல்லின் பொருள் யாது?
அ)கூட்டம் ஆ) அழகு இ)கடல் ஈ)வானம்
விடை: அ)கூட்டம்
48. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற கவிஞர் யார்?
அ)என்.எஸ். கிருஷ்ணன் ஆ)ஆலங்குடி சோமு இ)உடுமலை நாராயணக்கவி ஈ) வாணிதாசன்
விடை: ஆ)ஆலங்குடி சோமு
49. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?
அ)அஞ்சலையம்மாள் ஆ)மூவலுர் ராமாமிர்தம் இ)முத்துலட்சமி ஈ)கிரண்பேடி
விடை: இ)முத்துலட்சமி
50. தமிழ்த்தென்றல் என்றழைக்கப்படுபவர் யார்?
அ)இரா.இளங்குமரன் ஆ)காளமேகம் இ)மருதகாசி ஈ)திரு.வி.க
விடை: ஈ)திரு.வி.க
51. 8 ஆம் வேற்றுமை உருபு ………….. என்றழைக்கப்படும்
அ)விளிவேற்றுமை ஆ)வேற்றுமைத்தொகை இ)அன்மொழித்தொகை ஈ)உவமைத்தொகை
விடை: அ)விளிவேற்றுமை
52. நம்பியாரரார் என்றழைக்கப்படபவர் யார்?
அ) அப்பர் ஆ)சுந்தரர் இ)ஞானசம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்
விடை: ஆ)சுந்தரர்
53. கலித்தொகையின் பாவகை எது?
அ) வஞ்சிப்பா ஆ)ஆசிரியப்பா இ)கலிப்பா ஈ)வெண்பா
விடை: இ)கலிப்பா
54. புழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை எவை?
அ)பாறை ஓவியங்கள் ஆ)கல்வெட்டுக்கள் இ)செப்பேடுகள் ஈ)பனையோலைகள்
விடை: ஈ)பனையோலைகள்
55. மகேந்திரவர்மன் காலத்தில் இருந்த வீணையின் பெயர் என்ன?
அ)பரிவாதினி ஆ)மகரயாழ் இ)தேவதந்துபி ஈ)சகடயாழ்
விடை: அ)பரிவாதினி
56. தமிழில் முதலில் எழுந்த பரணி நூல் எது?
அ)கலிங்கத்து பரணி ஆ)தக்கயாக பரணி இ)பாசவதை பரணி ஈ)எதுவுமில்லை
விடை: அ)கலிங்கத்து பரணி
57. ‘கோடையும் வசந்தமும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அ)மீ.ராஜேந்திரன் ஆ)ராஜம் கிருஷ்ணன் இ) கி.ராஜநாராயணண் ஈ)வேலராமூர்த்தி
விடை: அ)மீ.ராஜேந்திரன்
58. 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு நடந்த இடம் எது?
அ)குமரி ஆ)கோவை இ) சென்னை ஈ)மதுரை
விடை: ஈ)மதுரை
59. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
அ) சிறுபஞ்சமூலம் ஆ)நாலடியார் இ)திருக்குறள் ஈ)திருமந்திரம்
விடை: ஈ)திருமந்திரம்
60. சுல்தான் அப்துல் காதர் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ) இஸ்மாயில் ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு இ) காயிதே மில்லத் ஈ)அமிர் குஸ்ரு
விடை: ஆ)குணங்குடி மஸ்தான் சாகிபு
61. ‘இந்தியா மொழிகளின்காட்சிசலையாக திகழ்கிறது’ கூறியவர் யார்?
அ)கால்டுவெல் ஆ)ச.அகத்தியலிங்கம் இ)மாக்ஸ் முல்லர் ஈ)ஜி.யு.போப்
விடை: ஆ)ச.அகத்தியலிங்கம்
62. ஈரோடு தமிழன்பன் எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)வணக்கம் வள்ளுவ ஆ)தமிழின்பம் இ)குறிஞ்சிமலர் ஈ)பிசிராந்தையார்
விடை: அ)வணக்கம் வள்ளுவ
63. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படுபவாது எந்தவகை இலக்கியம்?
அ)தூது இலக்கியம் ஆ)பிள்ளைத்தமிழ் இலக்கியம் இ)பள்ளு இலக்கியம் ஈ)பரணி இலக்கியம்
விடை: அ)தூது இலக்கியம்
64. ‘குழடனநச தமிழ்ச்கொல் தருக?
அ)அடுக்கு ஆ)மடிப்பு இ) திரை ஈ)உறை
விடை: ஈ)உறை
65. இந்திய நீர் பாசனத்தின் நந்தை யார்?
அ)பென்னி குயிக் ஆ)சர் ஆர்தர் காட்டன் இ) கரிகால் வளவன் ஈ)நம்மாழ்வார்
விடை: ஆ)சர் ஆர்தர் காட்டன்
66. திருத்தொண்டர் திருவந்தாதி எழுதியவர் யார்?
அ)சேக்கிழார் ஆ)பரஞசோதி முனிவர் இ)நம்பியாண்டார் நம்பி ஈ)குமரகுருபரர்
விடை: இ)நம்பியாண்டார் நம்பி
67. ‘அடுபோர்’ இலககண குறிப்பு தருக?
அ)வினைத்தொகை ஆ)பண்புத்தொகை இ)விணையாலணையும் பெயர் ஈ)தொழிற்பெயர்
விடை: அ)வினைத்தொகை
68. நாகலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?
அ)கந்தர்வன் ஆ)சோ.தர்மன் இ)ப.சிங்காரம் ஈ)வேல.ராமூர்த்தி
விடை: அ)கந்தர்வன்
69. “மழைக்காலமும் குயிலோசையும்” என்னம் நூலை எழுதியவர் யார்?
அ)வல்லிக்கண்ணன் ஆ)ஜெயகாந்தன் இ)மா.கிருஷ்ணன் ஈ)புலமைப்பித்தன்
விடை: இ)மா.கிருஷ்ணன்
70. மணிமேலையில் எத்தனை காதைக்ள உள்ளன?
அ) 20 ஆ)50 இ) 30 ஈ)40
விடை: இ) 30
71. ‘பெருநாவலர்’ என்ற சிறப்பு பெயர் யாருக்குரியது?
அ)ஒட்டக்கூத்தர் ஆ)இளங்கோ இ)கம்பர் ஈ)திருவள்ளுவர்
விடை: ஈ)திருவள்ளுவர்
72. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?
அ)பரிமேலழகர் ஆ)மல்லர் இ)நச்சர் ஈ)மணக்குடவர்
விடை: ஈ)மணக்குடவர்
73. உலகின் முதல் ஒளிபபடியை எடுத்தவர் யார்?
அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜான் ஷெப்பர்ட் இ)செஸ்டர்ன் கார்ல்சன் ஈ)வில்லியம்ஸ்
விடை: இ)செஸ்டர்ன் கார்ல்சன்
74. கவிப்பேரரசு வைரமுத்து எந்நூலுக்காக பத்தபு+’ன் விருது பெற்றார்?
அ)தமிழாற்றுப்படை ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)வைகறை மேகங்கள் ஈ)இந்த பு+ விற்பனைக்கல்ல
விடை: ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம்
75. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?
அ)ஆர்யப்பட்டர் ஆ)பிரம்ம குப்தர் இ)விக்ரம் சாராபாய் ஈ)இஸ்ரோசிவன்
விடை: இ)விக்ரம் சாராபாய்
76. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
அ)முத்துலட்சுமி ஆ)அஞ்சலையம்மாள் இ)ஜடாஸ் ஸ்கட்டர் ஈ)சாவித்ரி பு+லே
விடை: அ)முத்துலட்சுமி
77. தென்னகத்து பெர்னாட்ஷா எனப்படுபவர் யார்?
அ) ப.ஜீவானந்தம் ஆ)கக்கன் இ)காமரசர் ஈ)அறிஞர் அண்ணா
விடை: ஈ)அறிஞர் அண்ணா
78. பல்லவர் கால சிற்ப கலைக்கு மிகச்சிறந்த சான்று?
அ)மண்டகப்பட்டு ஆ)மாமல்லபுரம் இ)திருக்கழுக்குன்றம் ஈ)காஞ்சிபுரம்
விடை: ஆ)மாமல்லபுரம்
79. ‘சிறை’ பொருள் தருக?
அ)இறகு ஆ)சிறைச்சாலை இ)இல்லம் ஈ)எதுவுமில்லை
விடை: அ)இறகு
80. 1979ல் தி. ஜானகிராமன் எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)சக்திவைத்தியம் ஆ)முதலில் இரவு வரும் இ)அப்பாவின் சிநேகிதர் ஈ)மின்சாரப்பு+
விடை: அ)சக்திவைத்தியம்
81. சந்தக கவிமணி என்று குறிப்பிடப்படுபவர் யார்?
அ)காளமேகம் ஆ)படிக்காசுபுலவர் இ)தமிழழகனார் ஈ)செய்குதம்பி பாவலர்
விடை: இ)தமிழழகனார்
82. முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது ………….. எனப்படும்
அ)சொல்முரண் ஆ) இலக்கணை இ) இணைஒப்பு ஈ)எதிரிணை இசைவு
விடை: அ)சொல்முரண்
83. தவறின்றி தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ)அகிலன் ஆ)அசோகமித்ரன் இ)திலகவதி ஈ)மா.நன்னன்
விடை: ஈ)மா.நன்னன்
84. நனந்தலை உலகம் இதில் நனந்ததலை என்பதன் பொருள் என்ன?
அ) வறட்சியான ஆ)வளமான இ)குறுகிய ஈ)அகன்ற
விடை: ஈ)அகன்ற
85. விருந்தோம்பும் வி’யங்களாக அதிவீரராம பாண்டியர் குறிப்பிடும் வி’யங்கள் எத்தனை?
அ) 3 ஆ) 5 இ) 6 ஈ)9
விடை: ஈ)9
86. பரூஉக் ,குருஉக்கண், இலக்கண குறிப்ப தருக?
அ)இன்னிசை அளபெடை ஆ)சொல்லிசை அளபெடை இ)செய்யுளிசை அளபெடை ஈ)உயிரளபெடை
விடை: இ)செய்யுளிசை அளபெடை
87. கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிறுவியவர் யார்?
அ)கி.ராஜநாராயணன் ஆ)அழகிரிசாமி இ) பா.ஜெயப்பிரகாசம் ஈ)பு+மணி
விடை: அ)கி.ராஜநாராயணன்
88. எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருளின் பெயர் என்ன?
அ) பலா ஆ)கலா இ)நிலா ஈ)இலா
விடை: ஈ)இலா
89. நாலாயிர திவ்ய பரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது எது?
அ)தேவாரம் ஆ) திருவாசகம் இ)பெருமாள் திருமொழி ஈ)வள்ளலார் பாடல்கள்
விடை: விடையை கீழே comment செய்யவும்
90. கருந்துளை என்ற கோட்பாட்டையும் சொல்லையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?
அ)நியு+ட்டன் ஆ) ஜான் வீலர் இ)கலிலியோ ஈ)மைக்கல் பாரடே
விடை: ஆ) ஜான் வீலர்
91. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்னும் நூலின் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
அ)புவியரசு ஆ)கவிமணி இ)ராகுல் சாங்கிருதையன் ஈ)கணமுத்தையா
விடை: ஈ)கணமுத்தையா
92. முனிவு – பொருள் தருக
அ)அன்பு ஆ)வெகுளி இ)சினம் ஈ)துணிவு
விடை: இ)சினம்
93. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
அ)5 ஆ)4 இ)8 ஈ)6
விடை: இ)8
94. தேவராட்டத்திற்குரிய இசைக்கருவியின் பெயர் என்ன?
அ) பரிவாதினி ஆ) தேவதநுதுபி இ) பறை ஈ)தப்பாட்டம்
விடை: ஆ) தேவதநுதுபி
95. முத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவன் யார்?
அ) சிவன் ஆ) முருகன் இ)இந்திரன் ஈ)விஷ்ணு
விடை: ஆ) முருகன்
96. சா.கந்தசாமி எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ) விசாரணைக்கமிஷன் ஆ) அக்கினிச் சிறகுகள் இ)குறளோவியம் ஈ)வணக்கம் வள்ளுவ
விடை: அ) விசாரணைக்கமிஷன்
97. ஏற்பாடு என்பது எந்த நேரம்?
அ)இரவு 2-6 ஆ)மாலை 5-8 இ)பிற்பகல் 2-6 ஈ)காலை 6-10
விடை: விடையை கீழே comment செய்யவும்
98. இசைப்பேரரசி என்று நேருபெருமகனாரால் பாராட்டப்பட்டவர் யார்?
அ) சுசிலா ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி இ)சித்ரா ஈ)எவருமில்லை
விடை: ஆ)எம்.எஸ். சுப்புலட்சுமி
99. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்டவர் யார்?
அ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஆ)வாணிதாசன் இ) சுரதா ஈ)கண்ணதாசன்
விடை: ஈ)கண்ணதாச
100. வெண்பா எத்தனை வகைப்படும்?
அ) 5 ஆ)4 இ) 6 ஈ)8
விடை: விடையை கீழே comment செய்யவும்
சமூகம் மற்றும் பயிற்சி
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 1 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
வெண்பா ஐந்து வகைப்படும்
Hai
yes sollunga
ஏற்பாடு என்பது பொதுவாக பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கால அளவைக் குறிக்கும். இது ஒரு நாளின் ஆறு பொழுதுகளில் ஒன்று.
Pdf download option ilaya
will update mam