கேங்மேன் பணி
தொடர்பான வழக்கில் சுமுகமான
தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம்
பேருக்கு பணி வழங்கப்படும்
மின்
வாரியத்தில் உள்ள கேங்மேன்
பணி தொடர்பான வழக்கில்
சுமுகமான தீர்வு ஏற்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு பணி
வழங்கப்படும் என
மின்சாரத்துறை அமைச்சர்
தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்
மாவட்டத்திற்கு அருகில்
உள்ள புதுசத்திரம் ஒன்றியத்தில் மினி கிளினிக்கை அமைச்சர்
தங்கமணி திறந்து வைத்தார்.
அப்போது
பேசிய அவர் கூறியதாவது:
நாமக்கல்
மாவட்டத்தில் மொத்தம்
53 மினி கிளினிக்கள், 6 நடமாடும்
கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவைகளில் இதுவரை
18 கிளினிக்குகள் திறந்து
வைக்கப்பட்டுள்ளன. கொல்லிமலை
பகுதிகளிலும் மினி
கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.
மேலும்
மின்சார வாரியத்தில் உள்ள
கேங்மேன் பணிக்கான வழக்கு
நடைபெற்று வருகிறது. இதற்காக
3 நாட்களுக்கு முன் அனைத்து
தொழிற்சங்கங்களை அழைத்து
பேசினோம். இது 10 ஆயிரம்
குடும்பத்தின் நிலைமை.
எனவே அவர்களை கருத்தில்
கொண்டு கருணை அடிப்படையில் அந்த வழக்கை வாபஸ்
பெற வேண்டும்.
அடுத்த
வழக்கு விசாரணை வரும்போது
இதுகுறித்த மனுவை தாக்கல்
செய்ய உள்ளனர். இந்த
வழக்கு குறித்து சுமுகமான
முடிவு வந்தால் விரையில்
10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


