தொழில் தொடங்க
10 லட்சம் முதல் 5 கோடி
ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி
மத்திய
மற்றும் மாநில அரசுகளால்
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய
பங்களிப்பை கொடுக்கக்கூடிய சிறு
மற்றும் குறு தொழில்
முனைவோராக உருவெடுக்க விரும்புபவர்களுக்கு பல சலுகைகள்
வழங்கப்பட்டு வருகிறது.
அதில்
ஒன்றுதான் நீட்ஸ் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
புதிதாக தொழில் தொடங்க
10 லட்சம் முதல் 5 கோடி
ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த
கடனுதவி மாவட்ட தொழில்
மையம் மூலமாக வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற
விண்ணப்பதாரர் முதல்
தலைமுறை தொழில் முனைவோராக
இருக்க வேண்டும்.
குடும்ப
வருமான உச்ச வரம்பு
ஏதுமில்லை. பட்டப்படிப்பு அல்லது
பட்டயப் படிப்பு அல்லது
ஐடிஐ தேர்ச்சி பெறவேண்டும். வயது 21 முதல் 25 வரை
உள்ள ஆண் பெண்
விண்ணப்பிக்கலாம். மேலும்
தமிழ்நாட்டில் கடந்த
மூன்று வருடங்களாக தொடர்ந்து
வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய மாநில
அரசின் மானியத்துடன் கூடிய
ஏதேனும் ஒரு திட்டத்தில் கடன் பெற்றவர்கள் இந்த
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. வியாபாரம் சார்ந்த
தொழில்கள் தொடங்கவும் இந்த
திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
சுயதொழில்
துவங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs
அல்லது https://www.indcom.tn.gov.in/needs.html
என்ற இணையத்தளத்தின் மூலம்
இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்,
குடும்ப அட்டை அல்லது
வாக்காளர் அடையாள அட்டை
அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை
மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய
ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள்
ஆய்வு செய்தபிறகு சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு தகுதியின்
அடிப்படையில் பரிந்துரை
செய்யப்படும். கடன்
ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, வங்கிகள்
ஒப்புதல் அளித்ததும், உரிய
பயிற்சி அளிக்கப்படும். பிறகு,
மானியம் ஒதுக்கீடு செய்யப்படும். இது குறித்து கூடுதல்
விபரங்களுக்கு அந்தந்த
மாவட்ட தொழில் மையத்தை
அனுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


