TAMIL MIXER EDUCATION.ன்
Zerodha செய்திகள்
உடல் எடையை குறைத்தால் 10 லட்சம் பரிசுத் தொகை – Zerodha
பெங்களூரைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனமான செரோதா(Zerodha) தனது ஊழியர்களுக்கு சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் போது ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய தொடங்கினர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வீட்டில் இருந்தே வேலை பார்த்ததில் ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளதாக செரோதா நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலன் தொடர்பாக செரோதா நிறுவனம் அளித்துள்ள சவால்களைச் சரியாக கடைப்பிடிக்கும் நிறுவன ஊழியர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கத்தொகையும், அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என சிஇஓ நிதின் காமத் அறிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு குறைந்தது 350 கலோரிகளை குறைப்பது தான் சவால். இருப்பினும் இந்த இலக்கு மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் பிட்னஸ் டிராக்கர்களில், தினசரி இதற்கான இலக்குகள் அமைக்கப்படும்.
இந்த இலக்கில் 90 சதவீதத்தை நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் அடையும் ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை போனஸாக பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சவாலில் வெற்றி பெறுபவர்களுக்கு குலுக்கல் போட்டி நடைபெறும் என்றும் அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும் நிதின் காமத் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்ததில் உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளது. அதனால் இந்த புது வித செயல்கள் ஊழியர்களை உடல் பயிற்சி செய்யத் தூண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


