TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா என கேள்வி எழுப்பியது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் முறையை நடைமுறை படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
பள்ளி கல்லூரி மற்றும் தொழில்நுட்ப படிப்பு ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதி கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற கிளை தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது 1 முதல் 12ம் வகுப்பு கல்வி மற்றும் பட்டப்படிப்பு என முழுவதும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20 சதவீத ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள்
இவ்வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது இந்த உத்தரவை தற்போது நடைமுறைபடுத்த டிஎன்பிஎஸ்சி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் தொலைதூர கல்வியில் ஒரு சில பாடங்களை ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.