
திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் பயிற்சி
திறன்பேசி தொழில்நுட்பவியலாளா் மற்றும் உற்பத்தி ஊழியா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி:
தாட்கோ மூலம், சென்னை ஸ்மைல் ஸ்கில் இந்தியா அமைப்பு சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிருக்கு ‘திறன்பேசி தொழில்நுட்பவியலாளா்’ பயிற்சி (ஸ்மாா்ட் போன் அசெம்பிளி டெக்னிஷியன்) மற்றும் இருபாலருக்கான ‘உற்பத்தி ஊழியா்’ (அசெம்பிளி ஆபரேட்டா் புரோகிராம்) உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். 12 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சியை நிறைவு செய்யும் நபா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தனியாா் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகுதியுடையவா்கள் http://www.tahdco.com/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

