
இலவச தையல் பயிற்சி பெண்கள் விண்ணப்பிக்கலாம்
இலவசமாக அளிக்கப்படும் தையல் பயிற்சியில் சேர பெண்கள் மட்டும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெற உள்ளது.
வரும் 8 ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு நடக்கும் பயிற்சியில் சீருடை, உணவு, பயிற்சி, பயிற்சிக்கான உபாகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சோந்தவா்கள் மட்டும் பங்கேற்கலாம்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், அவா்களது குடும்பத்தைச் சோந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். விருப்பம் உள்ளவா்கள், 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 87783-23213 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

