
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் வரும் வியாழக்கிழமை (02.11.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், மடிப்பாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எனவே அந்தெந்த பகுதியை சேர்ந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மின்தடை ஏற்படும் இடங்கள்
தாம்பரம் : மாடம்பாக்கம், சாந்தி நிகேதன் காலனி, ரமணா நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மடிப்பாக்கம் : கக்கன் தெரு, சதாசிவம் நகர், ஏ.ஜி.எஸ் காலனி, அன்னை தெரசா நகர், ராம் நகர் வடக்கு மெயின் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தண்டையார்பேட்டை: டோல்கேட் நார்த் டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு, செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், மீன்பிடிதுறைமுகம், பூண்டி தங்கம்மாள் தெரு, ஆவூர் முத்தைய்யா தெரு, வ.உ.சி. நகர் சிவகாமி நகர், ஜீவா நகர், மங்கம்மாள் தோட்டம் காலடிப்பேட்டை தியாகராயபுரம், பி.பி.டி. ரோடு, பி.சதானந்தபுரம், ஏ.சதானந்தபுரம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


No commands simply waste