புதிய நிதியாண்டில் வரப்போகும் மாற்றங்கள் – சிலிண்டர் விலை முதல்
மாத சம்பளம் வரை
2021–2022 புதிய
நிதியாண்டில் மக்களின்
அத்தியாவசிய தேவைகளின் விலை
ஏற்றம் காண இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்கை
நிலை பாதிக்கப்படும் சூழல்
நிலவுகிறது. அதன்படி, புதிய
நிதியாண்டில் நிகழ
உள்ள மாற்றங்கள் குறித்து
இந்த பதிவில் காண்போம்.
ஏப்ரல்
1ம் தேதி முதல்
மத்திய அரசின் புதிய
ஊதிய விதி நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன்படி
தொழிலாளர்களின் சம்பளம்
50% அளவுக்கு உயர்த்தப்பட்டு, படி
50 சதவீதத்திற்குள் இருக்க
வேண்டும். இதனால் சமூக
பாதுகாப்பு விதிகளின் படி
அடிப்படை ஊதியத்தில் 12% அளவுக்கு
நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி
ஆணையத்திற்கு செலுத்த
வேண்டும். இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல்
10 சதவீதம் வரை குறையும்.
நாடு
முழுவதும் சமையல் எரிவாயு
சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையின்
கச்சா எண்ணெய் விலை,
இறக்குமதி செலவு, அமெரிக்க
டாலருக்கு நிகராக இந்திய
ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய்
நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல், டீசல், காஸ்
சிலிண்டர் விலையை கணக்கீடு
செய்கிறது. தற்போது சமையல்
எரிவாயு விலை 819 ஆக
உள்ளது. புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் விலை
இன்னும் ஏறும் வாய்ப்பு
உள்ளதால் மக்கள் மிகுந்த
அச்சத்தில் உள்ளனர்.
புதிய
நிதிக்கொள்கையின் விளைவாக
பொதுத்துறை வங்கிகள் தனியார்
மயமாக்கல் மற்றும் வங்கிகள்
இணைப்பு போன்றவற்றால் மக்கள்
பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
வங்கிகள் இணைப்பு நடைமுறையில் உள்ள வங்கிகளின் செக்
புக், IFSC code போன்றவை
மாற்றப்படும். இதனால்
குறிப்பிட்ட வங்கிகளை சேர்ந்த
மக்கள் பாதிக்கப்படக்கூடும்.
புதிய
நிதியாண்டில் EPF மற்றும்
TDS வரி போன்ற வரிகள்
புதிதாக நியமிக்கப்பட உள்ளது.
இதனால் EPF திட்டத்தில் ரூ.2.5
லட்சத்துக்கு மேல்
முதலீடு செய்பவர்களுக்கு வரி
விதிக்கப்படும். இதனால்
ஊழியர்களின் வருமானம் குறையும்.
TDS தொகையிலும் வரிக்கு புதிய
விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
வருமான வரி ரிட்டர்னை
முறையாக தாக்கல் செய்யாதவர்களுக்கு அவர்களது வங்கி
டெபாசிட் பணத்திற்கான TDS இரண்டு
மடங்கு அதிகமாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


