TN TRB – 9494 ஆசியர்கள்,
விரிவுரையாளர்கள் மற்றும்
உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள்
வருடந்தோறும் முது நிலை ஆசிரியர்கள், விரிவுரையாளர், இடை
நிலை ஆசிரியர்கள், உதவி
பேராசிரியர் என்று பல்வேறு
பணிகளுக்கான இடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.
அதேபோன்று
இந்த ஆண்டும் ஆசிரியர்
தேர்வு ஆணையம் மூலம்
9494 ஆசியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும்
உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம்
வருடத்துக்கான தேர்வு
கால அட்டவணையை தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு ஆணையம்
வெளியிட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
அதில்,
3902 இடைநிலை ஆசிரியர், 1087 முதுநிலை
ஆசிரியர் என்று மொத்தம்
4989 காலியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கான ஆசிரியர்
தகுதி தேர்வு இந்த
ஆண்டு ஏப்ரல் 2-வது
வாரத்தில் நடைபெறும் என்று
அறிவிப்பட்டுள்ளது. இதற்கான
அறிவிப்பு அடுத்த வாரம்
வெளியிடப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஜூன்
2-வது வாரத்தில் போட்டி
தேர்வு நடைபெறும். இதையடுத்து போட்டி தேர்வுக்கான அறிவிப்பு
மே மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 167 விரிவுரையாளர் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு ஜூன் 2-வது
வாரம் தேர்வு நடத்தப்படும் மற்றும் இதற்கான அறிவிப்பு
மே மாதத்தில் வெளியாகும். அதோடு மட்டுமல்லாமல் 1334 உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கு நவம்பர்
2-வது வாரத்தில் தேர்வு
நடைபெறும் மற்றும் ஜூலை
மாதத்தில் அறிவிப்பு வெளியாகும். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 2-வது வாரத்தில்
தேர்வு நடைபெறும் மற்றும்
ஜூலை மாதத்தில் அறிவிப்பு
வெளியாகும். அதன்பின் பொறியியல்
கல்லூரிகளில் 104 உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர்
2-வது வாரத்தில் தேர்வு
நடைபெறும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

