ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால
அவகாசத்தை மேலும் நீட்டிக்க
வேண்டும் என்று கோரிக்கை
எழுந்துள்ளது
மத்திய
அரசின் கட்டாய கல்வி
உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 1 – 10ம் வகுப்பு
வரையில் ஆசிரியர்களாக பணிபுரிய
விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டியது அவசியம்
ஆகும். இந்த தேர்வை
ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுக்கு
இரண்டு முறை நடத்த
வேண்டும். இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர்
தேர்வு வாரியமான TRB மார்ச்
7ம் அறிவித்தது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்ப பதிவு
மார்ச் 14ம் தேதி
தொடங்கி, ஏப்ரல் 13 முடிவடைகிறது.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால
அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே, பி.எட்., படித்த
50 ஆயிரம் நபர்களுக்கு தேர்வு
முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதனால்,
ஆசிரியர் தகுதித் தேர்வெழுதும் அடிப்படையில் விண்ணப்பம் பதிவுக்கான காலஅவகாசத்தினை நீட்டிக்க
வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி
உரிமைச் சட்டம் தமிழகத்தில் அமலான பிறகு தமிழக
பள்ளிக்கல்வித்துறையில் சேர்ந்த
ஆசிரியர்கள் பல பேர்
ஆசிரியர் தகுதித் தேர்வை
எழுதி தேர்ச்சி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆகவே, அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அடிப்படையில் விண்ணப்ப காலத்தை நீட்டிக்க
வேண்டும் என்று கோரிக்கை
வைத்துள்ளனர்.