11ம் வகுப்பு
முதல் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
11ம்
வகுப்பு முதல் PhD வரை
படிக்கும் மாணவர்களுக்கு அரசு
வழங்கும் உதவித்தொகை பெற
வரும் 31ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு
உதவி பெபறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி
நிலையங்களில் 11-ம் வகுப்பு
முதல் பி.எச்.டி
படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவ
உட்பட) பயிலும் இஸ்லாமிய,
கிறித்துவ, சீக்கிய புத்த/
பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த
மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு
பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது
மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் https://www.scholarships.gov.in/ என்ற
இணையதள முகவரியில் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதி
வாய்ந்த சிறுபான்மையின மாணவ/
மாணவியர்கள் மேற்படி
காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து
கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ, மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய
கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும், தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ,
மாணவியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்ட
தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி
மேற்படிப்பு மற்றும் தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.01.2022க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


12th student