சிவகங்கையில் பள்ளி,
கல்லூரி
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்
போட்டி
அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி சிவகங்கையில் ஏப்.19ம் தேதி
பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கான பேச்சுப்
போட்டி நடைபெற உள்ளது
என மாவட்ட ஆட்சியா்
பி.மதுசூதன் ரெட்டி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்
வளா்ச்சித் துறை சார்பில்
அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, சிவகங்கை, மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள
புத்தகத் திருவிழா அரங்கில்
வரும் ஏப். 19 (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெற
உள்ளது.
மாவட்ட
அளவில் நடைபெற உள்ள
இப்போட்டிகளில் வெற்றி
பெறும் பள்ளி, கல்லூரி
மாணவ, மாணவியருக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000,
இரண்டாம் பரிசாக ரூ.3,000,
மூன்றாம் பரிசாக ரூ.2,000
வழங்கப்பட உள்ளது. அத்துடன்
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்
போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுள் அரசு பள்ளி மாணவா்கள்
இருவரை மட்டும் தோவு
செய்து அவா்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்
தொகையாக ரூ.2,000 வழங்கப்பட
உள்ளது.
பள்ளி
மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி ஏப். 19ம் தேதி
முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறும்.
இதேபோன்று, கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கான போட்டி
அன்றைய தினம் பிற்பகல்
1.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளில் பங்கேற்க
விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த பள்ளி மாணவா்கள்
வட்டாரக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். அதே
போல், கல்லூரி மாணவ,
மாணவிகள் தாங்கள் பயிலும்
கல்லூரி முதல்வரிடம் விண்ணப்பிக்கலாம்.