சிறப்பு அஞ்சல்
உறை
வடிவமைப்பு
ஓவியப்போட்டி
சென்னை
அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம்
சார்பில், சிறப்பு அஞ்சல்
உறை வடிவமைப்பதற்கான ஓவிய
போட்டி நடைபெறவுள்ளது. இதன்
கருப்பொருளாக கரோனா
தடுப்பூசி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 6 முதல் 15 வயதுக்கு
உள்பட்டவா்கள் பங்கேற்கலாம். போட்டிக்கான நுழைவுக் கட்டணம்
ரூ.200. வங்கி வரைவோலை
அல்லது காசோலை மூலமாக
செலுத்த வேண்டும். செலுத்தப்படும் நுழைவுக் கட்டணம், செலுத்துபவரின் பெயரில் புதிய தபால்தலை
கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது பங்கேற்பாளரின் பெயரில்
ஏற்கெனவே தபால்தலை கணக்கு
இருந்தால் அவா்களின் கணக்கில்
வரவு வைக்கப்படும். புதிய
அஞ்சல் முத்திரைகள் ரூ.
200 வரை பங்கேற்பாளருக்கு அனுப்பப்படும்.
பங்கேற்பாளா்கள் விண்ணப்பத்தை; தலைமை
அஞ்சலக அதிகாரி, சிறப்பு
தபால்தலை மையம், அண்ணாசாலை
தலைமை அஞ்சலம், சென்னை
600 002 என்னும் முகவரிக்கு விரைவுத்
தபால் மூலமாகவோ அல்லது
பதிவுத் தபால் மூலமாகவோ
ஆகஸ்ட் 28ம் தேதி
அன்றோ அல்லது அதற்கு
முன்பாகவோ கிடைக்கும்படி அனுப்ப
வேண்டும்.
ஓவியங்கள்
ஏ4 அளவிலான காகிதத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே, வசதியான
நேரத்தில் ஓவியங்களை வரையலாம்.
நுழைவுக்கட்டணத்திற்கான காசோலை
அல்லது வரைவோலை தபால்
துறைக்கு கிடைத்தவுடன் பங்கேற்பாளா்களுக்கான சோ்க்கை எண்கள்
தெரிவிக்கப்படும்.
சோ்க்கை எண்கள் கிடைக்கப்
பெற்றவுடன், ஓவியத்தை ஸ்கேன்
செய்து மின்னஞ்சல் முகவரிக்கு பங்கேற்பாளரின் எண்ணை
குறிப்பிட்டு ஆகஸ்ட்
31-ஆம் தேதியோ அல்லது
அதற்கு முன்பாகவோ அனுப்ப
வேண்டும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஓா் ஓவியத்தை மட்டுமே
அனுப்ப வேண்டும். வெற்றி
பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும் என
சென்னை அண்ணாசாலை தலைமை
அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.