வேலைவாய்ப்பு இல்லாத
நபர்களுக்கு உதவித்தொகை – தருமபுரி
வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு தமிழக
அரசு சார்பில் ஊக்கத்தொகை.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழக
அரசின் சார்பில் படித்த
வேலைவாய்ப்பு இல்லாத
நபர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒன்றுக்கு
SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200,
SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,
மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு)
படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு
கீழ் படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750
பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த
திட்டத்தில் 30.06.2022 உடன்
முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட
தகுதியுடைய படித்த வேலை
வாய்ப்பு இல்லாத நபர்கள்
உதவி தொகை பெற
விண்ணப்பங்கள் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
கல்வித் தகுதியினை
வேலைவாய்ப்பகத்தில் பதிவு
செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை
தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு
வருடம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு 31.04.2022 அன்று 45 வயதும். மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரின் குடும்ப
வருமானம் ஆண்டிற்கு
ரூ.72,000 க்கு மிகையாமல் இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை,
அறிவியல் இது
போன்ற தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்.
இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப
படிவங்களை தருமபுரி மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி
செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற
சான்றுகளுடன் 31.05.2022 வரை
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


