முதற்கட்டமாக இந்த ஆண்டிற்குள் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி சுகாதார துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களான நர்சிங் அதிகாரிகளை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. மொத்தம் 105 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஆன்-லைனில் (https://recruitment.py.gov.in) விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்தமாதம் 15ம் தேதிக்குள் ஆன்-லைனில் வழியாகவே சமர்பிக்க வேண்டும். நர்சிங் பணியிடங்களுக்கு தகுதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு https://recruitment.py.gov.in மற்றும் https://health.py.gov.in என்ற இணையதளத்தினை பார்க்கவும். இத்தகவலை சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.