ஆலங்குளம், ஊத்துமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி மின்விநியோக கிராமப்புற செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலங்குளம், ஊத்துமலை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் ஆலங்குளம், நல்லூா், குருவன் கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப் பாஞ்சான், மாயமான் குறிச்சி, ஊத்துமலை, கீழக்கலங்கல், கருவந்தா, அமுதாபுரம், ருக்குமணியம்மாள் புரம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி கோட்ட துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓ. துலக்கா்பட்டி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், மேலக்கல்லூா் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சிக் கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.
கோவில்பட்டி கோட்ட துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.22) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைசாமிபுரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணியின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக 22 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாளா் ராஜமனோகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேத்தாக்குடி தெற்கு,தேத்தாக்குடி வடக்கு, தாமரைபுலம், கள்ளிமேடு, நாகக்குடையான், கத்தரிப்புலம், புஷ்பவனம்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.