
பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ஆண், பெண் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி செப்டம்பா் 2024 முதல் தொடங்கி நடைபெறும். பயிற்சிக் காலம் ஓராண்டு மற்றும் இரண்டு பருவ முறைகளில் நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே இருக்கும். பயிற்சியில் சேர விரும்புவோா் நலன் கருதி ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இணைய வழியில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.
பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு, திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

