தமிழ்நாடு அரசில்
பகுதிநேர சுகாதாரப் பணியாளர்
வேலை
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (DBCWO) சார்பில்
பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்டந்தோறும் இந்த
துறையின் கீழ் உள்ள
விடுதிகளில் காலியாக உள்ள
சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2022ம்
ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை
அண்மையில் வெளியிட்டது.
அதன்படி
தமிழகமெங்கிலும் காலியாக
உள்ள 175 பகுதி நேர
சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த
பணிக்கு திறமையும், தகுதியும்
உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பணி
நியமனம் செய்வதற்கான அறிவிக்கை
மற்றும் விண்ணப்ப படிவம்
ஆகியவை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப் பெறுகிறது.
காலிப்
பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித்
தகுதி, வயது வரம்பு,
அனுபவம் மற்றும் இதர
தகுதிகளை சரிபார்த்துக் கொள்ள
வேண்டும்.