ஜப்பானிய காடை
வளர்ப்பு – அதிக அளவில்
முதலீடு தேவையில்லை
நோய்
எதிர்ப்பு சக்தி அதிகம்
என்பதால் இவை அனைத்து
தட்பவெப்ப நிலையிலும் நன்கு
வளரும் தன்மை கொண்டது.
ஜப்பானிய
காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம்
தேவைப்படாது. 5 முதல் 7 வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
முதலீடு செய்த குறைந்த
நாட்களிலேயே பலன் கொடுக்கின்றன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஜப்பானிய
காடை 6 வாரத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம்
உட்கொள்ளும். தீவனச் செலவும்
குறைவு.
காடை
இறைச்சி அதிக அளவு
புரதச்சத்தும், குறைந்த
அளவு கொழுப்புச்சத்தும் கொண்டது.
உண்பதற்கு சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
காடையின்
ருசிமிக்க இறைச்சி, மலிவு
விலை மற்றும் அதிக
புரதச்சத்து போன்ற காரணங்களால் ஓட்டல்கள் மற்றும் துரித
உணவுக்கூடங்களில் மக்களிடம்
அதிக வரவேற்பை பெற்று
வருகின்றன.
இதனால்
காடை வளர்ப்பு தொழிலுக்கு அதிக சிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை சிறந்த
முறையில் பயிற்சி பெற்ற
பிறகு தொடங்கினால் லாபம்
மட்டும் தான்.
தீவனம்:
ஜப்பானிய
காடைகளுக்கு கோழித் தீவனத்தை
தான் பயன்படுத்துகின்றனர்.
காடைகளுக்கு குஞ்சுப் பருவத்தில் வழங்கும்
தீவனம் 26 – 28 சதவீதம்
புரதம் நிறைந்ததாக இருக்க
வேண்டும். இந்த வகைத்
தீவனத்தை முதல் 6 வாரம்
வரை கொடுக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

