காடு வளா்ப்பு
திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல்
வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கவும், சுற்றுப்புறச் சூழலை
பாதுகாக்கவும் விவசாய
நிலங்களில் நீடித்த பசுமைப்
போர்வைக்கான இயக்கம் எனும்
புதிய வேளாண் காடு
வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் 72 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விவசாய
நிலங்களின் வரப்புகளிலும் மற்றும்
குறைந்த எண்ணிக்கையில் விவசாய
நிலங்களிலும் நடவு
செய்து, மரம் சார்ந்த
விவசாயம் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தில் தேக்கு, மகோகனி, மருது,
வேம்பு, மலை வேம்பு,
நாவல், பெருநெல்லி, செம்மரம்,
புங்கன், வேங்கை மற்றும்
சந்தனம் உள்ளிட்ட மரக்கன்றுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையில் தயாராக உள்ளன. மரக்கன்று
ஒன்றை ரூ.15 என
வாங்கி நடலாம். நில
வரப்பில் நடவு செய்ய
ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு அதிகமாக 160 மரங்களும் வழங்கப்படும்.
மரக்கன்றுகளை பராமரிக்க, ஊக்கத் தொகையாக
இரண்டாம் ஆண்டு முதல்
நான்காம் ஆண்டு வரை
உயிருடன் உள்ள மரக்கன்று
ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும்
ரூ.7 சதவீதம் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ரூ.21
சதவீத தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு ஹெக்டேருக்கு மானியமாக ரூ.14 ஆயிரம்
வரை கிடைக்கும்.
திட்டத்தில் ஆதிதிராவிடா், சிறு
குறு விவசாயிகள் மற்றும்
பெண் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மரக்கன்றுகளைப் பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க
மையத்தில் பதிவு செய்யலாம்.