HomeBlogResume ரெடி பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

Resume ரெடி பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

 Resume ரெடி பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

Resume ரெடி பண்ணும்
போது கவனிக்க வேண்டிய
முக்கிய விஷயங்கள்

வேலைக்கு
விண்ணப்பிக்கும் போது,
அடிப்படையில் உங்களுடைய
ரெஸ்யூம் வைத்து தான்,
உயரதிகாரிகள் உங்களை
மதிப்பீடு செய்வார்கள்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

CV மற்றும்
Resume
இந்த இரண்டிற்கும் உள்ள
வித்தியாசம் தெரிந்து கொள்ள
வேண்டும்.

CV என்பது
வேலை பற்றிய அனுபவங்களை மட்டும் தெரிவிப்பது தான்
Curriculm Vitae CV
ஆகும்.

ரெஸ்யூம்
Resume
என்பது உங்களுடைய திறமைகள்,
கல்வித்தகுதி என
அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருப்பதாகும்.

புதிதாக
இப்போது தான் கல்லூரி
படிப்பு முடித்துவிட்டு வேலை
தேடுபவர்கள் ரெஸ்யூம் தேர்வு
செய்ய வேண்டும்.

ரெஸ்யூமின் முதல் பக்கத்தில் உங்களுடைய
பெயர், Email
ID
,
Mobile Number ஆகியவை
இருந்தால் போதுமானது. இதன்
மூலம் நிர்வாகம் உங்களை
எளிதாக தொடர்பு கொள்ளமுடியும். அதே சமயம், உங்களது
இமெயில் முகவரி fancy.யாக இருக்கக்கூடாது. வேலை பார்க்கும் இடத்துக்கு ஏற்றாற் போல் (Professional), இருக்க
வேண்டும்.

அதாவது,
உங்கள் பெயரை மட்டும்
ஹைலைட் செய்யும் வகையில்
இமெயில் ரெடி செய்து
கொள்ள வேண்டும். உதாரணமாக
dheepak.s@gmail.com, vishal.s@gmail.com

இதே
போல், உங்களது மார்பளவு
புகைப்படம் (Passport Size Photo) ஸ்கேன்
செய்து அதனை, ரெஸ்யூமின் வலது அல்லது இடது
ஓரத்தில் வைக்க வேண்டும்.
இமெயிலுக்கு குறிப்பிட்டது போலவே,
உங்களது புகைப்படமும் உங்களது
தரத்தை எடுத்துரைக்க வேண்டும்.
போட்டோவை பார்க்கும் போதே
அதில் ஒரு உத்வேகம்
தென்பட வேண்டும். செல்பிக்கு இருக்கக்கூடாது. செல்லும்
வேலை, நிர்வாகம், துறைக்கு
ஏற்றாற்போல் casual போட்டோ இருக்கலாம்.

அடுத்ததாக
ரெஸ்யூமில் Objective குறிப்பிட
வேண்டும். Objective என்பது
நீங்கள் வேலைக்கு சேருவதன்
நோக்கம். ஒரு நிர்வாகத்தில் எந்த துறைக்கு நீங்கள
வேலைக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டே
வரியில் எழுத வேண்டும்.
ஏதாவது ஒரு வேலை
இருந்தால் கொடுங்கள் என்று
இல்லாமல், எந்த துறையில்
நீங்கள் கெட்டிக்காரரோ அதை
தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இந்த
பகுதியில், நீங்கள் என்னவெல்லாம் படித்தீர்கள் என்பதை
பின்னோக்கி எழுத வேண்டும்.
அதாவது, முதலில் கல்லூரி
படிப்பு, மதிப்பெண் விபரங்கள்,
அதன்பிறகு, 12 ஆம் வகுப்பு,
அதைத் தொடர்ந்து 10 ஆம்
வகுப்பு என்றவாறு இருக்க
வேண்டும். இது தான்
நொடிப்
பொழுதில் உங்களுடைய Latest Update.டை தெரிவிக்கும்.

இப்போது
பெரும்பாலான நிறுவனங்கள், வேலைக்கு
ஆட்கள் தேர்வு செய்யும்
போது அவர்களுடைய சமூகவலைதள
பக்கங்கள், Blog, கட்டுரை போன்றவற்றையும் மதிப்பீடு செய்கின்றன.

எனவே,
நீங்கள் உங்கள் துறை
சார்ந்த விஷயங்களை சமூகவலைதளங்களில் பதவிட்டிருந்தால், உங்கள்
சமூகவலைதள முகவரியையும் ரெஸ்யூமில் குறிப்பிடலாம். அதாவது
Facebook, Linkedin, Youtube போன்றவை.

தனித்திறமைகள் எனும் போது மியூசிக்கல் சேர், லெமன் இன்
தி ஸ்பூன் என
நடிகர் சந்தானம் சொல்வது
போல் இருக்கக் கூடாது.
மற்றவர்களைக் காட்டிலும் நான் இந்த விஷயத்தில் கெட்டிக்காரன். என்னை
விட்டால், அந்த இடத்தை
யாராலும் நிரப்ப முடியாது
என்று நீங்கள் நம்பும்
விஷயங்களை குறிப்பிடலாம்.

அதாவது
தினசரி செய்தி அப்டேட்,
பொது
அறிவு, கணிதத்தில் கை
தேர்ந்தவர், நன்றாக எழுதுதல்
ஆகியவையாகும். அதுவும்
நீங்கள் படிக்கும் துறை
சார்ந்த பிரிவில் தனித்திறமைகள் இருந்தால், உங்களுக்கு வேலை
உறுதி.

இவை
அனைத்தும் ரெஸ்யூமில் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்.

மொத்தமாக
இரண்டு முதல் மூன்று
பக்கங்கள் வரையில் Resume இருக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!