ராமச்சந்திரா கல்வி
நிறுவனத்தில் ஹாக்கி
பயிற்சி
போரூா்
ஸ்ரீ ராமச்சந்திரா உயா்
கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தில் கோடை
கால ஹாக்கி பயிற்சி
முகாம் வருகிற 19ம்
தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அந்த கல்வி நிறுவனத்தின் விளையாட்டு அறிவியல் மைய இயக்குநா் எஸ்.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமச்சந்திரா விளையாட்டு அறிவியல் மையமும்
ஒலிம்பிக் வீரா் வி.பாஸ்கரன்
உயா் செயல்பாட்டு அகாதெமியும் இணைந்து கோடை கால
ஹாக்கி பயிற்சி முகாமை
நடத்தவுள்ளன. ஏப். 19 முதல்
ஏப்.30 வரை முகாம்
நடைபெறும்.
10 முதல்
16 வயதுடைய மாணவா்களுக்கும், விளையாட்டு வீரா்களுக்கும் வி.பாஸ்கரன்
மற்றும் பிரபல பயிற்சியாளா்கள் முகாமில் பயிற்சி அளிக்கவுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு 9444271202
என்ற எண்ணை தொடா்பு
கொள்ளலாம்.