HomeBlogவங்கிகளை விட அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை

வங்கிகளை விட அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை

Higher interest than banks - Special offer of EPF scheme

வங்கிகளை விட
அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை

நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும்
ஒவ்வொரு பணியாளர்களும் தங்கள்
எதிர்காலத்தை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள எதுவாக
உள்ளது EPF திட்டம். பொதுவாக
20
பணியாளர்கள் கொண்டுள்ள எந்தவொரு
நிறுவனமும் இந்த EPF முறையை
செயல்படுத்தலாம். இந்த
திட்டம் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வை
தருகிறது என்பது மறுக்க
முடியாத ஒன்று. ஒவ்வொரு
நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 15,000 சம்பளமாக பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு PF பணம்
பிடித்தம் செய்யப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அலுவலகங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரே வித சம்பளம்
வழங்கப்படுவதில்லை. அதனடிப்படையில் ஒருவர் பெரும் சம்பளத்திலிருந்து 12% தொகை பிடித்தம்
செய்யப்பட்டு அது
PF
கணக்கில் செலுத்தப்படும். இந்த
12%
பணம் ஊழியர்களின் 8.33% பென்ஷன்
திட்டத்திலும், 3.67% வருங்கால
வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த EPFO சேமிப்பு திட்டத்தின் கீழ் வருமான வரிச்
சட்டம் பிரிவு 80C கீழ்
வரி சலுகைகள் கிடைக்கின்றன. அதே போல் பணியாளர்களின் கணக்கிற்கு ரூ.7.50 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினால் ஊழியருக்கு வரி விதிக்கப்படும்.

ஊழியர்கள்
கணக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக
உபயோகத்தில் இல்லை என்றாலோ,
வேலையை விட்டு நீங்கினாலோ EPF கணக்கிலிருந்து எடுக்கும்
பணத்திற்கு வரி கிடையாது.
EPF
திட்டத்தின் கீழ் பென்சன்
பெற விரும்புபவர்கள் குறைந்த
பட்சம் 10 வருடம் EPF திட்டத்தில் பங்களிப்பு கொடுத்திருக்க வேண்டும்.
அதே சமயம் பென்சன்
பெறுவதற்கு 58 வயது வரை
காத்திருக்க வேண்டும். மேலும்
EPF
கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் ஒரு மாதம்
வேலை இல்லாமல் இருந்தால்
அந்த கணக்கிலிருந்து 75 சதவீதம்
பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

திருமணம்
போன்ற காரியங்களுக்காக ஒருவர்
EPF
கணக்கிலிருந்து 50 சதவீத
பணத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். மாத சம்பளம்
வாங்குபவர்களின் சம்பளத்திலிருந்து பெருமளவிலான தொகை
EPF
திட்டத்துக்கு கொடுக்கும் போது, மத்திய அரசு
EPF
கணக்கில் இருக்கும் தொகைக்கு
வட்டி கொடுக்கும். அதன்படி
2020-2021
நடப்பு நிதியாண்டில் 8.50 சதவீதம்
வட்டி வழங்க EPF அமைப்பு
பரிந்துரை செய்துள்ளது. இதன்படி
வங்கிகளின் FDக்கான வட்டியை
ஒப்பிடும் போது EPF வட்டி
அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Access @ ₹1/Day! 🔓