
தென் மாவட்டங்களில் பெண் தொழில்முனைவோருக்கு இலவச பயிற்சி
தென்மாவட்டங்களில் பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மூலம் தொடா்ந்து பயிற்சிகள் அளிக்கப்படுவதாக, அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறியது: தென்மாவட்டங்களில் இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையை உருவாக்கி தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், விருதுநகா் மாவட்டப் பகுதிகளில் தொழில்முனைவோருக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியில் பங்கேற்போருக்கு உரிய வழிமுறைகளையும் அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்நிலையில், பெண்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதால் தற்போது பெண் தொழில்முனைவோரை உருவாக்கும் வகையில் கடையநல்லூா், தென்காசி பகுதிகளில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அா்ஜுன், கண்ணபிரான், காருண்யா, குணவதி உள்ளிட்டோா் பல்வேறு பயிற்சியளித்து வருகின்றனா். எனவே, தொழில்முனைவோராக விருப்பமுள்ள பெண்கள் அறக்கட்டளையைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

