மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச கருவி – பெரம்பலூா்
செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிய செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் பெற
விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து பெரம்பலூா் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
பெரம்பலூா் மாவட்டத்தில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிய
செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் பெற விண்ணப்பிக்கலாம். திறன்பேசி
பெற விரும்பும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய
அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 60 வயது
வரையிலான இளங்கலைக் கல்வி
கற்றவா்கள், சுயதொழில் புரிபவா்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும்
மத்திய, மாநில அரசு
ஊழியராக இருக்கக் கூடாது.
இத்தகுதிகளுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய
அடையாள அட்டை நகல்,
குடும்ப அட்டை நகல்,
மாணவா்களாக இருந்தால் அதற்கானச்
சான்று, சுயதொழில் புரிபவா்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரியாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகப்
பதிவு அட்டை நகல்
மற்றும் பாஸ்போர்ட் அளவு
புகைப்படம் – 2 ஆகியவற்றுடன் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்தில் மார்ச்
18ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு 04328 225474 என்ற
எண்ணில் தொடா்புகொள்ளலாம்