HomeBlogஜன. 9ல் நடைபெறவிருந்த TNPSC தேர்வு தேதி மாற்றம்

ஜன. 9ல் நடைபெறவிருந்த TNPSC தேர்வு தேதி மாற்றம்

ஜன. 9ல்
நடைபெறவிருந்த TNPSC
தேர்வு தேதி மாற்றம்

வருகிற
ஜனவரி 9ஆம் தேதி
(
ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த TNPSC புள்ளியியல் சார்நிலை
பணிகளுக்கானத் தேர்வுகள்
ஜனவரி 11 ஆம் தேதி(செவ்வாய்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளன.

ஒமைக்ரான்
பரவலினால் தமிழகத்தில் இரவு
நேர ஊரடங்கு, ஞாயிறு
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி
(
ஞாயிற்றுக்கிழமை) TNPSCன் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கானத் தேர்வுகள்
முற்பகல், பிற்பகல் என
இரு தேர்வுகள் நடைபெறவிருந்தன. ஞாயிற்றுக்கிழமை முழு
ஊரடங்கு இருந்தாலும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று
முதலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு நாளில்
தேர்வர்களுக்கு பொதுப்
போக்குவரத்து மற்றும்
உணவுக்கான வசதி இல்லாத
சூழலில், தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை
கருத்தில் கொண்டும், தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை
மனுக்களின் அடிப்படையிலும், தேர்வு
வருகிற ஜனவரி 11 ஆம்
தேதிக்கு (செவ்வாய்கிழமை) மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே
பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டினை பயன்படுத்தி அதில்
குறிப்பிட்டுள்ள தேர்வு
மையத்தில் ஜனவரி 11 ஆம்
தேதி தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

Notification 1: Click
Here

Notification 2: Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular