Monday, September 1, 2025
HomeBlogவிரைவில் மத்திய அரசு பணிகளுக்கான செட் (CET) தேர்வுகள்

விரைவில் மத்திய அரசு பணிகளுக்கான செட் (CET) தேர்வுகள்

 

விரைவில் மத்திய
அரசு பணிகளுக்கான செட்
(CET)
தேர்வுகள்

மத்திய
அரசு பணிகளில் சேர
பலர் கனவுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மத்திய
அரசு ஒரு அருமையான
வாய்ப்பினை வழங்கியுள்ளது.
அதில் மத்திய அரசு
பணிகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு செட் தேர்வை
ஆன்லைன் மூலமாக நடத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த
அறிவிப்பு விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த
August மாதம் நடைபெற்ற
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய ஆள்தேர்வு முகமை
இதனை அறிவித்திருந்தது.

அந்த
அறிவிப்பின் படி குரூப்
C மற்றும் குரூப்
B பிரிவுகளில் வேலைக்கு
செல்ல விருப்பமுள்ளவர்களுக்கு செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலமாக
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இதற்காக மத்திய அமைச்சரவை
ஒப்புதலுடன் கூடிய தேசிய
ஆள்தேர்வு முகமை உருவாக்கப்பட்டு விட்டதாகவும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.

மேலும்
பொதுத் தகுதித் தேர்வுகளான பணியாளர்கள் தேர்வு ஆணையம்
(
SSC), ரயில்வே வாரியங்கள் (RRB) மற்றும் வங்கி
பணியாளர் தேர்வு நிறுவனம்
(
IBPS) போன்றவை தேசிய
ஆட் தேர்வு முகமையின்
கீழ் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த
ஆன்லைன் தேர்வு அறிவிப்பு
மூலமாக போக்குவரத்து வசதி
இல்லாத தொலைதூர இடங்களில்
உள்ள தேர்வர்களும், பெண்
தேர்வர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும்
என இணையமைச்சர் ஜிதேந்திர
சிங் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments