மானியத்தில் இருசக்கர
வாகனம் பெற உலமாக்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் மானிய
விலையில் இருசக்கர வாகனம்
வாங்க உலமாக்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
வக்ஃப் வாரியத்தில் பதிவு
செய்யப்பட்டு, பெரம்பலூரிலுள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியை
சிறப்பாக செய்வதற்கு புதிய
இருசக்கர வாகனங்கள் வாங்க
மானியம் வழங்கும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபருக்கு,
இரு சக்கரவாகனத்தின் மொத்த
விலையில் ரூ. 25 ஆயிரம்
அல்லது வாகனத்தின் விலையில்
50 சதவீதம் இதில் எது
குறைவோ அத்தொகை மானியமாக
வழங்கப்படுகிறது.
மேலும்
விவரங்கள் மற்றும் படிவத்தை
ஆட்சியரகத்தில் உள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகத்தில் நேரில்
பெற்று, பூா்த்திசெய்து உரிய
ஆவணங்களுடன் நேரில் சமா்ப்பித்து பயன்பெறலாம்.