‘ஆவின்’ பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்குவதை, அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
ஆவின் பணியாளர்களுக்கு, 2021 – 22ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் 8.33 சதவீதம், கருணைத் தொகை 1.67 சதவீதம் என, மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள், தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பணிபுரியும், 26 ஆயிரத்து 493 பணியாளர்களுக்கு, இவ்வாண்டு 8.44 கோடி ரூபாய், தீபாவளி போனசாக வழங்கப்பட உள்ளது.
சென்னை நந்தனம் ஆவின் இல்லம் வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆவின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு அடையாளமாக, 14 பணியாளர்களுக்கு போனஸ் தொகையை, அமைச்சர் நாசர் நேரடியாக வழங்கினார். மொத்த செலவீனம் 8.44 கோடி ரூபாய்.
இந்த நிதி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் நிதியில் இருந்து செலவிடப்படுகிறது.