TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
கவின் கலை
படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
துவங்கியுள்ளது
தமிழக
அரசின் கவின் கலைக்
கல்லுாரிகளில், இளங்கலை,
முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் துவங்கியுள்ளது. தமிழக
அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில், சென்னை
மற்றும் கும்பகோணத்தில், கவின்கலை
கல்லுாரிகள் இயங்குகின்றன.
இவற்றில்,
நான்காண்டு இளங்கலை கவின்
கலை படிப்புகளும், இரண்டாண்டு முதுகலை கவின் கலை
படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.
அதாவது,
காட்சித் தொடர்பு வடிவமைப்பு என்ற, விசுவல் கம்யூனிகேஷன் டிசைன், வண்ணக்கலை எனும்
பெயின்டிங், சுடுமண் ஆலையக
வடிவமைப்பு என்ற, இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக்,
ஆலையக துகிலியல் வடிவமைப்பு எனும், இண்டஸ்ட்ரியல் டிசைன்
இன் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய
பிரிவுகள் உள்ளன.
இவற்றில்,
பி.எப்.ஏ.,
என்ற இளங்கலை; எம்.எப்.ஏ.,
என்ற முதுகலை படிப்புகள் உள்ளன. ‘பிரின்ட் மேக்கிங்‘
என்ற பதிப்போவியத்தில் இளங்கலை
மட்டுமே உள்ளது.
விண்ணப்பங்களை, www.artandculture.tn.gov.in
என்ற இணையதளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து, உரிய
படிவங்களுடன் வரும்,
31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு, சென்னை
கல்லுாரியை, 044 2561 0878; கும்பகோணம் கல்லுாரியை, 0435 2481 371 என்ற தொலைபேசி
எண்களில் தொடர்பு கொண்டு
தகவல் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here