Tuesday, August 5, 2025

ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கொடுக்கும் கொய்யா

A guava gives three and a half lakhs a year

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் ஐடியாக்கள் (Business Ideas)

ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கொடுக்கும் கொய்யா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள அயோத்திப்பட்டி
பகுதியைச்
சேர்ந்த
அரசு
என்பவர்,
சொட்டுநீர்ப்
பாசனம்
அமைத்து,
3
ஏக்கர்
பரப்பில்
இயற்கை
முறையில்
தைவான்
பிங்க்
ரகக்
கொய்யா
சாகுபடி
செய்து,
வெற்றிகரமாக
மகசூல்
எடுத்து
வருகிறார்.

பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு கூறியது:

இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு நாலரை ஏக்கர். மூணு வருஷத்துக்கு
முன்னாடி,
நெல்,
வாழை
மாதிரியான
பயிர்களைச்
சாகுபடி
செஞ்சு
கிட்டு
இருந்தேன்.
இது
வறட்சியான
பகுதிங்
கறதால,
தண்ணீர்
பற்றாக்குறையால
ரொம்பவே
சிரமப்பட்டுப்
போயிட்டேன்.

வறட்சியால பல தடவை நஷ்டத்தைச் சந்திச்சிருக்கேன்.
இந்தச்
சூழ்நிலையில
தண்ணீர்
அதிகம்
தேவைப்படாத
பயிர்களைச்
சாகுபடி
செய்யணும்னு
முடிவெடுத்தேன்.
இதுக்குக்
கொய்யா,
கொடுக்காப்புளி,
மர
வகைப்
பயிர்கள்
உகந்ததா
தெரிஞ்சது.

மூணு ஏக்கர்ல தைவான் பிங்க் ரகக் கொய்யா, ஒரு ஏக்கர்ல கொடுக்காப்புளி,
அரை
ஏக்கர்ல
சந்தன
மரங்களைப்
பயிர்
செஞ்சேன்.
பண்ணையைச்
சுத்திலும்
வேலி
ஓரத்துல
தேக்கு,
மகோகனி,
குமிழ்தேக்கு,
வேங்கை
உட்பட
இன்னும்
சில
மரங்களைப்
பயிர்
செஞ்சேன்.
என்று
தெரிவித்தவர்
தன்னைப்
பற்றிய
தகவல்களைப்
பகிர்ந்துகொள்ளத்
தொடங்கினார்.

பல தலைமுறைகளா விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். எனக்கும் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். கல்லூரிப் படிப்பை முடிச்சதும் வேலைக்குப் போக விரும்பாம, விவசாயத்துல ஈடுபட ஆரம்பிச்சேன்.
25
வருஷம்
கடந்துடுச்சு.

ரசாயன முறையில நெல், நிலக்கடலை, சம்பங்கினு விதவிதமான பயிர்கள் சாகுபடி செஞ்சுகிட்டு
இருந்தேன்.
அதுல
எனக்கு
நிறைவான
லாபமில்லை.
இந்தச்
சூழ்நிலையில
தான்
கடந்த
சில
வருஷங்களுக்கு
முன்னாடி
எனக்குப்
பசுமை
விகடன்
அறிமுகமாச்சு.

இயற்கை முறையில தைவான் பிங்க் ரகக் கொய்யா சாகுபடி செஞ்சா, நிறைவான லாபம் கிடைக்கும்னு
ஒரு
விவசாயி
தன்னோட
அனுபவத்தைச்
சொல்லி
யிருந்தார்.
தோட்டக்கலைத்துறை
அதிகாரிகள்
கிட்டயும்
இது
தொடர்பா
ஆலோசனைகள்
கேட்டு,
3
ஏக்கர்ல
இதைச்
சாகுபடி
செஞ்சேன்.

தலா 6 அடி இடைவெளியில ஏக்கருக்கு சுமார் 1,000 கன்றுகள் வீதம் நடவு செஞ்சேன். கன்று நடும்போது குழியில அடியுரமா ஆட்டு எரு, மாட்டு, எரு, வேப்பம்புண்ணாக்கு,
உயிர்
உரங்கள்
கலந்து
போட்டோம்.
கன்று
நட்ட
பிறகு,
மூணு
மாசத்துக்கு
ஒரு
தடவை
எரு
கொடுத்துக்கிட்டு
இருந்தோம்.
அது
தவிர
அமுதக்கரைசல்,
ஜீவாமிர்தம்,
மூலிகைக்கரைசல்,
மீன்
அமிலம்,
வேஸ்ட்டிகம்போஸர் கரைசலும் தொடர்ச்சியா கொடுத்துக்கிட்டு
இருக்கோம்.
இதனால
செடிகள்
நல்லா
செழிப்பா
வளர்ந்து,
காய்ப்பு
கொடுத்துக்கிட்டு
இருக்கு
என்று
சொன்னவர்,
மகசூல்
மற்றும்
வருமானம்
குறித்த
தகவல்களைப்
பகிர்ந்துகொண்டார்.

கன்று நட்ட 3ம் மாசமே பூ பூத்து பிஞ்ச விட ஆரம்பிச்சது. 7ம் மாசம் வரைக்கும் பிஞ்சுகளைக் கிள்ளி விட்டுக்கிட்டே
இருந்தேன்.
அதுக்குப்
பிறகு
வந்த
பிஞ்சு
களை
முத்த
விட்டேன்.
11
ம்
மாசம்
காய்
பறிப்புக்கு
வந்துச்சு.
அடுத்த
ரெண்டு
மாசத்துக்குத்
தொடர்ச்சியா
காய்ப்பு
இருந்துச்சு.
முதல்
பறிப்புல
1
டன்
காய்கள்
கிடைச்சது.

காய்ப்பு ஓய்ஞ்சதும் செடிகளைக் கவாத்து பண்ணினேன். ரெண்டு மாசம் கழிச்சு, மறுபடியும் காய்க்க ஆரம்பிச்சது. ரெண்டாவது பறிப்புல ஏக்கருக்கு ரெண்டரை டன் காய்கள் மகசூல் கிடைச்சது. மூணாவது பறிப்புலயும்
ரெண்டரை
டன்
மகசூல்
கிடைச்சது.
ஒரு
வருஷத்துல
ஏக்கருக்கு
மொத்தம்
6
டன்
காய்கள்
மகசூல்
கிடைச்சிருக்கு.

ஒரு கிலோவுக்குச்
சராசரியா
30
ரூபாய்
வீதம்
6
டன்
காய்களுக்கு
1,80,000
ரூபாய்
வருமானம்
கிடைச்சது.
பறிப்புக்கூலி,
களையெடுப்பு,
இடுபொருள்,
கவாத்து
உட்படப்
பராமரிப்புச்
செலவுகள்
63,000
ரூபாய்
போக,
மீதி
1,17,000
ரூபாய்
நிகர
லாபமா
கிடைச்சிருக்கு.
மூணு
ஏக்கர்
தைவான்
பிங்க்
ரகக்
கொய்யா
சாகுபடி
மூலம்
3,51,000
ரூபாய்
லாபம்
கிடைச்சிருக்கு.
அடுத்தடுத்த
வருஷங்கள்ல
காய்ப்பு
இன்னும்
அதிகமாகி,
கூடுதலா
லாபம்
கிடைக்கும்னு
எதிர்பார்க்குறேன்
என
மகிழ்ச்சியோடு
தெரிவித்தார்.

தொடர்புக்கு:

அரசு,

செல்போன்: 86675 70675

சாகுபடி செய்யும் முறை

ஒரு ஏக்கரில் தைவான் பிங்க் ரகக் கொய்யா சாகுபடி செய்ய அரசு சொல்லிய செயல்முறைகள்,
பாடமாக
இடம்
பெறுகின்றன.

தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் 4 சால் உழவு ஓட்ட வேண்டும். வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்கு செடி 6 அடி இடைவெளியில், ஓர் அடி சுற்றளவு, ஓர் அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 4 கிலோ மாட்டு எருவுடன், 1 கிலோ ஆட்டு எரு, 20 கிராம் வேப்பம்பிண்ணாக்கு,
தலா
10
கிராம்
அசோஸ்பைரில்லம்,
சூடோமோனஸ்,
பாஸ்போ
பாக்டீரியா,
டிரைக்கோ
டெர்மா
விரிடி
கலந்து
இட
வேண்டும்.
அதன்
பிறகு,
செடியை
நடவு
செய்ய
வேண்டும்.

15-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் தலா 2 லிட்டர் அசோஸ்பைரில்லம்,
ரைசோபியம்
கலந்து
சொட்டுநீர்ப்
பாசனம்
மூலம்
கொடுக்க
வேண்டும்.
30-
ம்
நாள்
200
லிட்டர்
அமுதக்கரைசல்,
40-
ம்
நாள்
200
லிட்டர்
ஜீவாமிர்தம்,
50-
ம்
நாள்
200
லிட்டர்
தண்ணீருடன்
20
லிட்டர்
மூலிகைக்கரைசல்,
200
லிட்டர்
தண்ணீருடன்
2
லிட்டர்
மீன்
அமிலம்,
200
லிட்டர்
தண்ணீருடன்
20
லிட்டர்
வேஸ்ட்
டிகம்போஸர் கரைசல் கலந்து சொட்டுநீர்ப்
பாசனம்
மூலம்
கொடுக்க
வேண்டும்.
அமுதக்கரைசல்,
ஜீவாமிர்தம்,
மூலிகைக்கரைசல்,
மீன்
அமிலம்,
வேஸ்ட்டிகம்போஸர் ஆகியற்றை 10 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் சொட்டுநீர்ப்
பாசனம்
மூலம்
கொடுக்க
வேண்டும்.

பூச்சித்தாக்குதல்களைக் கட்டுப்படுத்த

கொய்யா சாகுபடியில் கற்றாழைப் பூச்சித் தாக்குதலை எதிர்கொள்வது
பெரும்
சவாலானது.
இப்பூச்சிகள்
தென்பட்டால்
10
லிட்டர்
தண்ணீரில்
1
லிட்டர்
பசுமாட்டுச்
சிறுநீர்,
50
கிராம்
பெருங்காயத்தூள்
ஆகியவற்றைக்
கலந்து
தெளிக்க
வேண்டும்.
வரும்முன்
காப்போம்
நடவடிக்கையாக
15
நாள்களுக்கு
ஒருமுறை
இக்கரைசல்
தெளித்து
வந்தால்,
கற்றாழைப்
பூச்சிகள்
உட்பட
எந்த
ஒரு
பூச்சித்தாக்குதலும்
ஏற்படாமல்
செடிகளைப்
பாதுகாக்கலாம்.

செடிகள் நன்கு காய்க்க தொடங்கியதும்
பழ
ஈக்களின்
தாக்குதலுக்கான
வாய்ப்புகள்
அதிகம்.
இதைத்
தவிர்க்க,
பூப்பூக்கத்
தொடங்கியதும்,
ஒரு
ஏக்கருக்கு
4
இடங்களில்
விளக்குப்
பொறி
வைத்துக்
கட்டுப்படுத்தலாம்.
3
மாதத்துக்கு
ஒரு
முறை
ஒரு
செடிக்கு
2
கிலோ
வீதம்
அடியுரமாகச்
செறிவூட்டப்பட்ட
எரு
இட
வேண்டும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் அளவைக் கூட்டிக்கொள்ள
வேண்டும்.
செறிவூட்டப்பட்ட
எரு
தயார்
செய்ய
இயலவில்லையென்றால்,
அதற்கு
மாற்றாக,
மண்புழுவுரம்
வைக்கலாம்.
2
மாதங்களுக்கு
ஒரு
முறை
களை
எடுக்க
வேண்டும்.
காய்
பறிக்கும்போதே
செடியின்
நுனிக்
கொழுந்துகளைக்
கிள்ளி
விட
வேண்டும்.
காய்ப்பு
ஓய்ந்ததும்
கவாத்துச்
செய்ய
வேண்டும்.
இயற்கை
முறையில்
முறையாகப்
பராமரித்தால்
7
முதல்
10
ஆண்டுகள்வரை
தொடர்ந்து
காய்
பறிக்கலாம்.

ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் இத்தோட்டம் அமைந்துள்ளது.
இதனால்
இங்கு
ஏதேனும்
அசம்பாவிதம்
நிகழாமல்
தடுக்க,
இத்தோட்டத்தில்
கண்காணிப்புக்
கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து
நம்மிடம்
பேசிய
அரசு,
இங்க
சந்தனம்,
மகோகனி,
வேங்கை
மாதிரியான
விலையுயர்ந்த
மரங்கள்
நிறைய
இருக்கு.

பழப்பயிர்களும்
சாகுபடி
செஞ்சிருக்கோம்.
இதனால்
திருட்டுப்
போறதுக்கான
வாய்ப்புகள்
இருக்கு.
அது
மாதிரி
ஏதாவது
அசம்பாவிதம்
ஏற்படாமல்
பாதுகாக்குறதுக்காக,
தோட்டத்துக்கு
உள்ளேயும்
வெளியேயும்
10
க்கும்
மேற்பட்ட
சிசிடிவி
கேமராக்களைப்
பொருத்தியிருக்கேன்.

இந்த கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்த தோட்டத்தையும்
முழுமையா
கண்காணிக்க
முடியுது.
இந்தக்
கேமராக்களோட
வீடியோ
பதிவுகளை
இணையத்தொடர்பு
மூலம்
என்னோட
மொபைல்ல
இணைச்சு
24
மணிநேரம்
கண்காணிக்க
ரொம்ப
வசதியா
இருக்கு.

இதனால் தோட்டத்துக்குத்
தனியாகக்
காவல்காரர்
போடும்
செலவு
மிச்சமாகுது.
என்னோட
தோட்டத்துல
பராமரிப்புப்
பணிகள்
நடக்குறப்ப
அதையும்
மொபைல்
போன்
மூலமாவே
பார்த்து,
தேவையான
அறிவுறுத்தல்களைச்
சொல்ல
முடியுது.
தோட்டத்துல
என்ன
நடந்துச்சோ,
ஏது
நடந்துச்சோங்கற
பயம்
இல்லாம
நிம்மதியா
இருக்கேன்.
கண்காணிப்புக்
கேமராக்கள்
பொருத்த
50,000
ரூபாய்
செலவாச்சு.

எரு

நிழலில் ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் 2 டன் எரு பரப்ப வேண்டும். அதில், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ
பாக்டீரியா,
டிரைக்கோடெர்மா
விரிடி
ஆகியவற்றில்
தலா
2
கிலோவும்,
அடுப்புச்சாம்பல்
100
கிலோவையும்
சேர்த்து
நன்கு
கலவையாக்க
வேண்டும்.
இக்கலவையின்
மீது
எருக்கு,
புங்கன்,
புளியமர
இலை,
வேம்பு,
ஆடாதொடா,
ஆவாரை,
துத்தி,
நொச்சி
ஆகியவற்றின்
இலைகளைத்
தலா
10
கிலோ
போட்டு
மூடி
வைக்க
வேண்டும்.
ஒருநாள்
விட்டு
ஒருநாள்
இக்கலவையின்
மீது
தண்ணீர்
தெளித்து
வர
வேண்டும்.
15
நாள்களுக்கு
ஒரு
முறை
கிளறி
விட
வேண்டும்.
அடுத்த
45
நாள்களில்
செறிவூட்டப்பட்ட
எரு
தயாராகிவிடும்.

மூலிகைக் கரைசல்

எருக்கு, புங்கன், புளியமர இலை, வேம்பு, ஆடாதொடா, ஆவாரை, துத்தி, நொச்சி ஆகியவற்றில் தலா 20 கிலோவைத் தனித்தனியாகச்
சேகரித்துக்கொள்ள
வேண்டும்.
இவற்றை
100
லிட்டர்
கொள்ளளவு
கொண்ட
தனித்தனி
டிரம்களில்,
தனித்தனியாகப்
போட
வேண்டும்.
டிரம்
நிறையும்படி
தண்ணீர்
ஊற்றி
7
நாள்கள்
ஊற
வைக்க
வேண்டும்.

இந்த நாள்களில் அவற்றின் சாறு முழுவதும் தண்ணீருடன் கலந்துவிடும்.
இதுதான்
மூலிகைக்கரைசல்.
இதில்,
ஒவ்வொரு
டிரம்மிலும்
தலா
30
லிட்டர்
எடுத்து,
தனியாக
ஒரு
டிரம்மில்
கலந்து
அதை
அப்படியே
சொட்டுநீர்
மூலம்
விட
வேண்டும்.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

Related Articles

Popular Categories