தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்- விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு சார்பாக மகளிர் உதவித்தொகை, புதுமைபெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தென் சென்னை எல்லைக்குட்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் போன்கள் கல்வி பயில்பவர்கள். பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது.
தகுதிகள் என்ன.?
- செவித்திறன் பாதிக்கப்பட்ட / பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 80% 100% உள்ள மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
- இளநிலை பட்ட படிப்பு மற்றும் முதுநிலைபட்டபடிப்பு பயிலும், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பகலாம்.
- 18 வயது பூர்த்தி அடைந்த பட்டயபடிப்பு /polytechnic ITI பயிற்சி பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து அரசு ஊதியம் பெறும் மாற்றுத்திறனாளியாக இருத்தல் கூடாது.
- அதிகபட்ச வயது வரம்பு 70 ஆகும்.
கடைசி தேதி என்ன.?
எனவே, தென் சென்னையை சார்ந்த மேற்காணும் தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் 19.08.2024 க்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு சென்னமாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

