
கலைஞரின் கனவு இல்லம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,100 கோடி செலவில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
வீடுகள் அனைத்தும் 360 சதுர அடியில் சமையலறையுடன் இருக்க வேண்டும்.
300 சதுர அடி RCC கூரையுடன், மீதமுள்ள 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும்.
வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும்.
ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.
குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


எனக்கு வீடு வேண்டும். பழைய மண் சுவர் வீடாக உள்ளது. மாண்புமிகு அண்ணன் முதல்வர் அவர்கள் எங்களுக்கு வீடு ஏற்பாடு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம். பூலாங்கால் m.உமாபதி.
எனக்கு இடமும் இல்லை வீடும் இல்லை இரண்டு குழந்தைகள் மிகவும் சிரமத்தில் உள்ளேன் படித்து வேலை இல்லை எனக்கு எதாவது உதவி செய்யுங்கள் தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் இருக்கு but பட்டா இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உதவி கரம் கொடுங்கள் நன்றி 🙏🏻🙏🏻