
உடல் பயிற்சி சிகிச்சை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம்
தாட்கோ மூலம் மானியத்துடன் உடல் பயிற்சி சிகிச்சை (பிசியோ தெரபி) மையம் அமைக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆதிதிராவிடா், பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் உடற்பயிற்சி மையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படவுள்ளது. உடற்பயிற்சி சிகிச்சை பயிற்சியில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு முடித்தவா்கள் அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் 18 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
சிகிச்சை மையம் அமைக்க அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 6 லட்சம் அனுமதிக்கப்படும். இதில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் 5 முதல் 10 சதவீதம் சொந்த முதலீடாக வங்கியில் செலுத்தி, மீதத் தொகைக்கு வங்கிக் கடனுதவியாகப் பெறலாம்.
தகுதியானவா்கள் தங்களது புகைப்படம், சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

