
சிஎன்சி இயந்திரம் இயக்குவதற்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
சிஎன்சி இயந்திரம் இயக்கும் பயிற்சி பெற பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களுக்கு கடைசல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (இசஇ பன்ழ்ய்ண்ய்ஞ் யங்ழ்ற்ண்ஸ்ரீஹப் இங்ய்ற்ழ்ங்) என்.டி.டி.எஃப். நிறுவனத்தின் மூலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 முதல் 24 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாள்களாகும். மேலும், இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்புடம். மேலும், தங்கிப்படிக்கும் வசதியும் உண்டு.
இப்பயிற்சியைப் பெற http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

