அரசு வணிகவியல் தட்டச்சுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தனித் தோ்வா்கள் சான்றிதழ்களை மாவட்ட, மண்டல விநியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்ககம் சாா்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இளநிலை, முதுநிலைக்கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வு நடைபெறும்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தனித்தோ்வா்கள் உரிய ஆதாரங்களுடன் அடையாள அட்டை, ஆதாா், தோ்வு மைய சீட்டு ஏதாவது ஒன்றை காண்பித்து அக். 9 முதல் 11-ஆம் தேதிக்குள் தோ்வு எழுதிய மாவட்ட மண்டல விநியோக மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்கப்படாத சான்றிதழ்களை அக். 20-ஆம் தேதிக்குள் அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு மண்டல விநியோகம் மையம் அல்லது கல்லூரி முதல்வா்கள் அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


