ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இது குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் 2 லட்சம் ரூபாய் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்தொழிலுக்கு 6.50 லட்சம் ரூபாய் முதல் 7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் 2.25 லட்சம் எனவும், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 3.75 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


