HomeBlogகுரூப் - 4 தேர்வு - இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்

குரூப் – 4 தேர்வு – இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்




அரசு துறைகளில் காலியாக உள்ள, 6,491 பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் – 4 தேர்வு வழியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 16.30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 301 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், செப்., 1ல் தேர்வு நடைபெற உள்ளது.

ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தேர்வு கட்டணத்தின் ரசீது நகலுடன், விண்ணப்பதாரர் விபரங்களைcontacttnpsc@gmail.com என்ற, ‘மெயில்முகவரிக்கு, 28க்குள் அனுப்ப வேண்டும்.பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய, வங்கி, தபால் அலுவலகம், பரிவர்த்தனை குறியீட்டு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்! ‘டி.என்.பி.எஸ்.சி.,யின் நியமனங்கள் அனைத்தும், தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.




குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பொய்யான வாக்குறுதி கூறி, தவறான குறுக்கு வழியில், வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத்தரகர்களிடம், கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களால் ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும், தேர்வாணையம் பொறுப்பாகாதுஎன, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது. பணியிடங்கள் விபரம்! வி..., என்ற கிராம நிர்வாக அதிகாரி, 397; பிணையமற்ற இளநிலை உதவியாளர், 2,688; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர், 104; வரி வசூலிப்பவர்முதல் நிலை, 34 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன. நில அளவையாளர், 509; வரைவாளர், 74; தட்டச்சர், 1,901; சுருக்கெழுத்து தட்டச்சர், 784 காலியிடங்களில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரத்து, 600 ரூபாய் முதல், 65 ஆயிரத்து, 500 வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பதவிகளுக்கு, குறைந்தபட்சம், 19 ஆயிரத்து, 500 முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களைwww.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!