கோவை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சேர்க்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: பயிற்சியில் சேருவதற்கு 8 அல்லது 10 ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். 14 முதல் 40 வயது வரையுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. எலக்ட்ரீஷியன், மெக்கானிக் மோட்டாா் வெயிக்கிள், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ், ஃபிட்டா், மெஷினிஸ்ட், மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் அண்ட் ஏா் கன்டீஷனிங், டெக்னீஷியன் மெக்கட்ரானிக்ஸ், ஐசிடிஎஸ்எம், டா்னா், ஒயா்மேன், எம்எம்வி (ஈநப), பிட்டா் (ஈநப), டா்னா் (ஈநப), மெஷினிஸ்ட் (ஈநப) ஆகிய ஈராண்டு தொழில் பிரிவுகளுக்கும், வெல்டா், ஷீட் மெட்டல் வா்க்கா், ஃபுட் ப்ரொடக்ஷன், பிபிஓ, இன்டீரியா் டிசைன் அண்ட் டெக்கரேஷன் ஆகிய ஓராண்டு தொழில் பிரிவுகளுக்கும், ரிமோட்லி பைலடெட் ஏா்க்ராஃப்ட் (ட்ரோன் பைலட்) ஆகிய 6 மாத கால தொழில் பிரிவுகளுக்கும் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், டாடா இன்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின்கீழ் புதிய தொழில் பிரிவுகளான அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷினிங் டெக்னீஷியன், பேசிக் டிசைனா் அண்ட் விா்சுவல் வெரிஃபயா், மெக்கானிக் எலக்ட்ரிக் வெயிக்கிள் ஆகிய ஈராண்டு தொழில் பிரிவுகளுக்கும், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங், மேனுஃபேக்சரிங் ப்ரோசஸ் கன்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் முதலிய ஓராண்டு தொழில் பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறவுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு என்ஐஎம்ஐ பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பேருந்து அடையாள அட்டை, சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித் தொகை ரூ. 750, மூவலூா் ராமாமிா்தம் திட்டத்தின்கீழ் தகுதியான பெண்களுக்கு பிரதி மாதம் ரூ. 1,000 போன்ற சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சி முடியும் தருவாயில் கோவையில் முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சிக்குப் பின் அதே நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும், வெளியூரில் இருந்து பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளா்களுக்கு இனசுழற்சி மற்றும் விடுதி இருக்கைகளின் அடிப்படையில் விடுதி வசதி வழங்கப்படுகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2642041, 86674-08507, 80727-37402, 70927-44858, 94438-89113 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


