HomeBlogSurgical bandage making தொழில்

Surgical bandage making தொழில்

 

Surgical
bandage making
தொழில்

Surgical bandage rolling machine & surgical bandage
cutting machine
இவை இரண்டும் பேண்டேஜ் உற்பத்தி செய்ய தேவைப்படும் இயந்திரங்கள் ஆகும். அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கின்றது. எனவே அங்கு ஆர்டர் செய்தும் பெற்று கொள்ளலாம். இந்த இரண்டு இயந்திரங்களையும் வாங்க குறைந்த பட்சம் 3,00,000/- வரை தேவைப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

surgical bandage cloth, காக்கி பேப்பர் மற்றும் பசை இந்த மூன்று பொருட்கள் தான் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மூல பொருட்கள் ஆகும். இவற்றையும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

செய்யும் முறை:

Surgical bandage rolling machine-ல் surgical bandage cloth, காக்கி பேப்பர் மற்றும் பசை இவை மூன்றையும் செட் செய்து இயந்திரத்தை இயக்கினால், சர்ஜிக்கல் பேண்டேஜ் ரோல் ஆகும். இவ்வாறு ரோல் செய்யப்பட்ட bandage.னை கட்டிங் இயந்திரத்தில் பொருத்தி கட்டிங் செய்ய வேண்டும்.

நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு 4 இன்ச் அளவு கொண்ட சர்ஜிக்கல் bandage.களை 800 பீஸ் வரை தயார் செய்யலாம் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை உற்பத்தி செய்தால் 8,000 பீஸ் bandage உற்பத்தி செய்யலாம். இவ்வாறு தயார் செய்வதன் மூலம் 25 நாட்களுக்கு
2,00,000/-
பீஸ் பேண்டேஜிகளை தயார் செய்யலாம்.

இயந்திரங்களை இயக்குவதற்கு 2KW மின்சாரம் அவசியம் தேவைப்படும். மின்சார செலவு 4000/-

பேக்கிங் செய்வதற்கு மற்றும் மற்ற இதர செலவுகளுக்கு 65,000/- தேவைப்படும்.

எனவே ஒரு மாதம் உற்பத்திக்கான தயாரிப்பு செலவு 80,000/- தேவைப்படும்.

மூலப்பொருட்கள் வாங்க ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?

சந்தைகளில் ஒரு மீட்டர் surgical bandage cloth-யின் விலை 7 ரூபாய், நம் உற்பத்திக்கு கிட்டத்தட்ட 50,000 மீட்டர்
surgical bandage cloth
தேவைப்படும். இதற்கு 3,50,000/- செலவாகும்.

உற்பத்தி செலவிற்கு மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்க்கு கிட்டத்தட்ட நமக்கு 4,20,000/- ஒரு மாதத்திற்கு சர்ஜிக்கல் பேண்டேஜ் தயார் செய்வதற்கு தேவைப்படும்.

4 இன்ச் அளவு கொண்ட சர்ஜிக்கல் bandage சந்தைகளில் 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாம் 2,00,000/- சர்ஜிக்கல் பேண்டேஜினை உற்பத்தி செய்துள்ளோம் என்றால் 6,00,000/- ரூபாய் நமக்கு வருமானமாக கிடைக்கும். இந்த 6 லட்சத்தில் உற்பத்தி செலவு போக நமக்கு லாபமாக 1,70,000/- ரூபாய் கிடைக்கும்.

bandage தொழில் துவங்க நமக்கு தேவைப்படும் லைசன்ஸ்:

Trade license பெற்றிருக்க வேண்டும், உத்யோக ஆதார் என்கின்ற ஆன்லைன் சேவையில் பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு GST.க்கு அப்ளை செய்ய வேண்டும். Drug license பெற்றிருக்க வேண்டும்.

நாம் தயார் செய்த இந்த சர்ஜிக்கல் பேண்டேஜினை அனைத்து மெடிக்கல் ஷாப் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!