HomeBlogவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் பரிசுப் போட்டி

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் பரிசுப் போட்டி

 

வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் பரிசுப் போட்டி

சேலம் மாநகராட்சிப் பகுதியில் சிறந்த முறையில் வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சைக்கிள் பரிசுப் போட்டி நடத்தப்படுகிறது.

சேலம் மாநகரை தூய்மையான, சுகாதாரமான நகரமாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக, வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கும் செயல் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தைச் சிறப்பாக மேற்கொள்ள சேலம் மாநகராட்சி, சேலம் மண்டல இந்தியன் வங்கியுடன் இணைந்து மாநகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் பரிசுப் போட்டியை நடத்துகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் வீட்டில் 1.வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும்.

2. மாடித் தோட்டம் அமைத்திருக்க வேண்டும்.

3.நெகிழி உபயோகமில்லா வீடாக இருக்க வேண்டும்.

4.மழை நீா் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஏதேனும் ஒன்றினை சிறப்பாக செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.

பரிசுப் போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் http://bitly.com/salemcorp என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் 200 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 5,000 மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

கூடுதல் விபரங்களை பெற http://www.salemcorporation.gov.in/
என்ற இணையதள முகவரியிலோ, 9943516516 – என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் .பிரவீன்குமார் செல்லிடப்பேசி 8526291167, சுகாதார அலுவலா் சு.மணிகண்டன் 9976392560, சுகாதார ஆய்வாளா் .சந்திரன் 9842890099, சுகாதார அலுவலா் .மாணிக்கவாசகம் 9842699888, சுகாதார அலுவலா் கி.ரவிச்சந்தா் 7598205707 ஆகியோரை தொடா்பு கொண்டு பரிசுப் போட்டி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular