HomeBlogTNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

 

TNPSC குரூப்-2
தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னையில் TNPSC குருப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக வடசென்னை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

TNPSC
வெளியிட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, குருப்-2
தேர்வுக்கான அறிவிப்பு மே
மாதத்தில் வர இருக்கிறது. இதன்மூலம் 2000-த்துக்கும் அதிகமாக
காலியிடங்கள் நிரப்பப்படலாம். இத்தேர்வுக்கு அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை
வாய்ப்பு பயிற்சி மையம்,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், தீண்டாமை
ஒழிப்பு முன்னனி ஆகியவை
இணைந்து முதல்நிலைத் தேர்வு,
முதன்மைத் தேர்வு பாடத்திட்டங்களை இணைத்து இலவசமாக பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகள், தொழில்
நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும்
இருக்கும். அதிகபட்சமாக வகுப்புகள் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். தேர்வில் வெற்றி
பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனை
வழங்குவார்கள். அரசுத்
துறைகளில் பல்வேறு நிலையில்
உள்ளவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

இப்பயிற்சி பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில்
உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெறும். இதற்கான வகுப்புகள் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை
9.30
மணி முதல் மாலை
4.30
மணி வரை வகுப்புகள் நடைபெறும். பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விரும்புவோர் 6369874318,
9444641712, 7092095474
ஆகிய செல்போன் எண்களில்
தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular