தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
விருதுபெறும் ஆசிரியர்கள், ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவர். அந்த வகையில், 2023-24ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம்.அதன்படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருந்து என மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


