கனரா வங்கியின் சாா்பில் நடத்தப்படும் இலவச அழகு கலைப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


