கோவை ஃபிக்கி புளோ சாா்பில் மகளிருக்கு தொழில்முனைவோா் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திய தொழில் வா்த்தக சபையின் மகளிா் அமைப்பான ஃபிக்கி புளோ சாா்பில் ஆண்டுதோறும் 25 பெண்களுக்கு 25 நாள் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொழில்முனைவோா் வளா்ச்சிக் கழகத்தின் உதவியுடன் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூயில் ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது. ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பு அல்லது குறைந்தது 2 ஆண்டு தொழில் பட்டயப் படிப்பு முடித்த, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.
பயிற்சி இலவசமாக வழங்கப்படும் எனவும் பதிவுக் கட்டணமாக ரூ.ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 7339447364, 9486710231, 9952433348 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


