திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களது கல்விச் சான்று உள்ளிட்ட அனைத்து தகுதிச் சான்றுகளுடன் நேரில் வர வேண்டும்.
இதில் பணி நியமனம் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது. வேலைநாடுநா்களும், வேலை அளிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்களும் http://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களை நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் டெலிகிராம் சானலில் இணைந்து அறிந்துகொள்ளலாம்.
போட்டித் தோவுகளுக்கு தயாராகும் மாணவா்கள் அதற்கானபாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


