TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழக வங்கிகளில் CORONA விதிமுறைகள்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. இதனை தடுக்க
பல புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. மக்கள்
முகக்கவசம் கட்டாயம் அணிய
வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200
அபராதம் விதிக்கப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் அதிகமாக வரும்
வங்கிகளுக்கான விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கையை தமிழக
மாநில வங்கியாளர்கள் குழுமம்
அனுப்பியுள்ளது.
அதில்:
CORONA காரணமாக ஏப்ரல் 30 ஆம்
தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா
கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து
தமிழக அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்
முடிவில்:
வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வரும்போது
வெப்பநிலை சோதனை செய்ய
வேண்டும். அவர்கள் கட்டாயம்
முகக்கவசம் அணிந்து வர
வேண்டும். அவ்வாறு அணியாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும்
வங்கிகளில் வேலைகளை முடிக்கும் வரை முகக்கவசத்தை கழட்டாமல்
இருக்க வேண்டும். தொடுதல்
இல்லாத வகையில் கை
கழுவும் கிருமிநாசினிகளை நுழைவு
வாயிலிலும், பொது இடங்களிலும் வைக்க வேண்டும்.