தமிழகத்தில் ஆவின்
பால் விற்பனையில் புதிய
திட்டம்
தமிழக
அரசின் அறிவிப்பின் படி
மே 16 முதல் ஆவின்
பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி
ஒவ்வொரு வகையான பால்
பாக்கெட்டுகளுக்கும் 3 ரூபாய்
வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது
பொது முடக்கம் நடைமுறையில் உள்ளபடியால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
உணவு விநியோகம் செய்பவர்கள் மூலமாக தடையின்றி ஆவின்
பால் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் ஆவின் பால் விலை
பாக்கெட்டுகளுக்கு 3 ரூபாய்
வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. பால் அட்டை
வழியாக ஆவின் பால்
பெறுபவர்கள் ஏற்கனவே முன்பணத்தை செலுத்தியிருப்பார்கள். அதனால்
பால் விலை குறைப்பு
வித்தியாசம் அடுத்த மாத
விற்பனையின் போது ஈடு
செய்யப்படும். தமிழகத்தில் தற்போது பொது முடக்கம்
அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக,
சென்னை மக்களுக்கு தடையின்றி
பால் மற்றும் பிற
பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்
படி, சோமாட்டோ மற்றும்
டன்சோ ஆகிய உணவு
நிறுவனங்கள் மூலமாக பால்
விநியோகம் செய்யப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
பால் விநியோகம் குறித்த
புகார்கள், ஆலோசனைகள் இருந்தால்
அவற்றை தெரிவிக்க 044 – 2346 4575,
2346 4576, 2346 4578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி
எண் 1800 425 3300 ஆகிய
தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


