TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓராண்டு பயிற்சிக்கு, 48 இடங்கள் உள்ளன.அதேபோல், இரண்டாண்டுகள் பொருத்துனர் பயிற்சிக்கு 20; கம்மியர் மோட்டார் வாகனம் பயிற்சிக்கு 24; மின் பணியாளர் பயிற்சிக்கு 20; எலக்ட்ரானிக் மெக்கானிக் பயிற்சிக்கு 24 இடங்கள் உள்ளன.மேலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஓராண்டு குழாய் பொருத்துனர் பயிற்சிக்கு, 48 இடங்கள் உள்ளன.இப்பயிற்சி வகுப்புகளில் சேர, மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை.
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை சென்னை – 14 என்ற முகவரியில், விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். ஆக., 31ம் தேதிக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 – 2847 3117; 2951 5312; 70104 57571; 79049 35430 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


